நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23 ரபி பருவத்தில், 5 மாநிலங்களிலிருந்து 180.71 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் (16.05.2022 வரை)

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2022 4:47PM by PIB Chennai

2022-23 ரபி பருவத்தில், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு கோதுமை கொள்முதல் நடைபெற்று வருகிறது. 16.05.2022 வரை குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், ரூ.36,412.86 கோடிக்கு 180.71 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 16.99 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

2021-22 கரீப் பருவத்தில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு நெல் கொள்முதல் செய்வது சுமூகமாக நடைபெற்று வருகிறது. 16.05.2022 வரை 777.97 லட்சம் மெட்ரிக் டன் நெல் (கரீப் பருவத்தில் 751.84 லட்சம் மெட்ரிக் டன், ரபி பருவத்தில், 26.13 லட்சம் மெட்ரிக் டன் உட்பட), குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில், ரூ.1,52,482.46 கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 111.64 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து 34,76,501 மெட்ரிக் டன் நெல், ரூ.6,813.94 கோடி  அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,23,708 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1826109) வருகையாளர் எண்ணிக்கை : 157
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी