குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் மறைவுக்கு இந்தியாவின் சார்பாக இரங்கல் தெரிவிக்க குடியரசு துணைத்தலைவர் அந்நாட்டுக்கு சென்றடைந்தார்
Posted On:
15 MAY 2022 7:59PM by PIB Chennai
இரண்டு நாட்களுக்கு முன்பு மறைந்த ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஹெச்.எச்.ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவுக்கு இந்தியாவின் சார்பாக அஞ்சலி செலுத்த துணைக் குடியரசுத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு இன்று அபுதாபி சென்றடைந்தார்..
அபுதாபியில் உள்ள முஷ்ரிப் அரண்மனையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிற அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களை சந்தித்த திரு நாயுடு, சிறந்த உலகத் தலைவர் மற்றும் இந்தியாவின் உண்மையான நண்பர் என்று மறைந்த அதிபரின் பங்களிப்பை நினைவு கூர்ந்தார். அவரது மறைவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறினார்.
சந்திப்பின்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹெச்.எச்.ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு குடியரசு துணைத்தலைவர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். புதிய அதிபரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் இந்தியா- ஐக்கிய அரபு அமீரக கூட்டாண்மை தொடர்ந்து முன்னேறி புதிய உயரங்களை எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
*******
(Release ID: 1825635)
Visitor Counter : 162