தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மெய்நிகர் வடிவில் 17-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா

प्रविष्टि तिथि: 13 MAY 2022 5:23PM by PIB Chennai

ஆவணப்படம், குறும்படம் மற்றும் அனிமேஷன் படங்களுக்கான மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் 17-வது பதிப்பு வரும் 29-ந் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான தொடக்க விழா மும்பையின் ஒர்லியில் உள்ள நேரு மைய அரங்கத்தில் நடைபெறும்.  அடுத்த மாதம் 4-ந் தேதி விருது வழங்கும் நிகழ்ச்சியுடன் திரைப்பட விழா நிறைவடையும்.

திரைப்பட விழாவுக்கான ஊடகப்பதிவு இன்று துவங்குவதாக திரைப்படபிரிவின் தலைமை இயக்குனரும், மும்பை சர்வதேச திரைப்பட விழாவின் இயக்குனருமான திரு ரவீந்தர் பாக்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, ஜப்பான் கூட்டு தயாரிப்பில் உருவான முதலாவது அனிமேஷன் படமான ராமாயணா இந்த திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

சிறந்த திரைப்படத்துக்கு தங்க சங்கு விருது வழங்கப்படும். இது 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசை கொண்டதாகும். ஆவணத் திரைப்பட பிரிவில் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள திரைப்பட இயக்குனருக்கு டாக்டர் வி சாந்தாராம் ஆயுட்கால சாதனை விருது வழங்கப்படும்.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825126

***************


(रिलीज़ आईडी: 1825184) आगंतुक पटल : 173
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , हिन्दी , Punjabi , Urdu