பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலத்தின் பரூச்சில் நடைபெற்ற முன்னேற்றப் பெருவிழாவில் பிரதமரின் உரை

Posted On: 12 MAY 2022 4:04PM by PIB Chennai

வணக்கம்!

இன்றைய ‘முன்னேற்றப் பெருவிழா’, உண்மையிலேயே பாராட்டுக்குரியது, ஒரு தீர்மானத்துடனும், அர்ப்பணிப்புடனும் அரசு, பயனாளியைச் சென்றடையும் போது அது ஆக்கப்பூர்வமான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

நாட்டிற்கு சேவை புரிவதற்காக  குஜராத்தில் இருந்து என்னை தில்லிக்கு நீங்கள் அனுப்பி எட்டு ஆண்டுகள் இருக்கும். இந்த எட்டு ஆண்டுகள், சேவை, நல்ல ஆளுகை மற்றும் ஏழைகளின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதை தான் இன்று என்னால் செயல்படுத்த முடிகிறது. உங்கள் மத்தியில் வாழ்ந்து, வளர்ச்சி, வலிகள், வறுமை மற்றும் பிரச்சினைகளை அனுபவித்திருக்கிறேன். ஏழைகளுக்கான நல்வாழ்வு திட்டங்களில் இருந்து ஒரு பயனாளி கூட விடுபட்டு விடக்கூடாது என்பது அரசின் தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. நமது அரசு எட்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், புதிய உறுதிப்பாடு மற்றும் புதிய சக்தியுடன் முன்னேற நாம் தயாராகி வருகிறோம். 2014- ஆம் ஆண்டு உங்களுக்கு சேவை புரிவதற்காக எங்களுக்கு நீங்கள் வாய்ப்பளித்த போது நாட்டின் மக்கள்தொகையில் அரை சதவீதத்தினருக்கு கழிவறை வசதிகள், தடுப்பூசிகள், மின்சார இணைப்புகள், வங்கி கணக்குகள் உள்ளிட்டவை மறுக்கப்பட்டிருந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆண்டுவாக்கில் ஒவ்வொருவரின் முயற்சியுடன் பல்வேறு திட்டங்களை 100% அளவிற்கு நிறைவேற்ற நம்மால் முடிந்துள்ளது. எட்டு ஆண்டுகள் என்ற முக்கிய தருணத்தில், ஒவ்வொருவரின் முயற்சி மற்றும் கடின உழைப்புடன் நாம் முன்னேறி, ஏழை மக்கள் அனைவருக்கும், தகுதியான அனைவருக்கும் கிடைக்க வேண்டிய பலனை உறுதி செய்ய வேண்டும்.

நண்பர்களே,

100% பயனாளிகளைச் சென்றடைய இன்று நாடு தீர்மானித்துள்ள நிலையில், அவ்வாறு நடக்கும்போது திருப்திப்படுத்தும் அரசியல் முடிவுக்கு வருகிறது. அதற்கு இடமில்லை. 100% பயனாளிகளைச் சென்றடைவது என்பது சமூகத்தில் கடைசி நபரையும் சென்றடைவது.

நண்பர்களே,

விதவை தாய்மார்கள் இன்று எனக்கு வழங்கிய ராக்கி மிகவும் பெரியது. இது வெறும் கயிறு மட்டுமல்ல, எந்த கனவுகளை நோக்கி நாம் முன்னேறியுள்ளோமோ, அவற்றை நிறைவேற்றுவதற்கான வலிமையையும் நீங்கள் எனக்கு வழங்கியுள்ளீர்கள். இந்த ராக்கியை விலைமதிப்பற்ற பரிசாக நான் கருதுகிறேன். ஏழை மக்களுக்கு சேவை புரியவும், திட்டங்களை 100% செயல்படுத்தவும், இது எனக்கு ஊக்கம், துணிச்சல் மற்றும் ஆதரவை வழங்கும்.

நண்பர்களே,

சமூக பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலன் சார்ந்த அரசின் பிரச்சாரத்தை ஒரே வார்த்தையில் விவரிக்க வேண்டுமானால், அது ஏழைகளின் கண்ணியம். ஏழைகளின் கண்ணியத்திற்கான அரசு, உறுதிப்பாடுகள் மற்றும் மாண்புகள்கள். அதுதான் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. பரூச் மாவட்டம் மிகப்பெரிய முன்முயற்சியை மேற்கொண்டிருப்பது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். வந்தே மாதரம்!

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியிலும், குஜராத்தியிலும் வழங்கியிருந்தார்.

***************



(Release ID: 1825014) Visitor Counter : 156