வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஓமனுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்திற்கு இந்தியா பரிசீலனை – திரு பியூஷ் கோயல்
Posted On:
12 MAY 2022 5:02PM by PIB Chennai
ஓமன் நாட்டுடன் முன்னுரிமை அடிப்படையிலான வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரம், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
புதுதில்லியில் இன்று இந்தியா – ஓமன் கூட்டு வர்த்தக கவுன்சிலின் 10-வது கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்திய அவர், ஓமன் முக்கிய உறுப்பு நாடாக உள்ள வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளுடன் இந்தியா ஏற்கனவே விரிவான வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து, பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.
.இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையே நேற்று கூட்டு ஆணையக் கூட்டம் நடைபெற்றதை சுட்டிக்காட்டிய அவர், அதை மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்தது என்று தெரிவித்தார். இருதரப்பு வர்த்தக தலைவர்களும், விரிவான விவாதம் நடத்தி நட்புறவை வலுப்படுத்த உதவுவார்கள் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இருநாடுகளின் அரசுகளும், நட்புறவை மேலும் வலுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கூட்டு வர்த்தக கவுன்சிலின் ஆலோசனை பெரிதும் உதவும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஓமன் நாட்டின் வர்த்தகம், தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கைஸ் பின் முகமது அல் யூசுப், ஓமன் நாட்டுக்கான இந்திய தூதர் திரு அமித் நரங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824773
***************
(Release ID: 1824810)
Visitor Counter : 155