மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

20-வது கால்நடை கணக்கெடுப்பின் அடிப்படையில் கால்நடைகள் மற்றும் கோழிகளின் இன வாரியான அறிக்கை வெளியீடு

Posted On: 12 MAY 2022 12:52PM by PIB Chennai

20-வது கால்நடை கணக்கெடுப்பின் அடிப்படையில் கால்நடைகள் மற்றும் கோழிகளின் இன வாரியான அறிக்கையை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா புதுதில்லியில் இன்று வெளியிட்டார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகனும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் திரு அதுல் சதுர்வேதி, இணைச் செயலாளர் திரு உபமன்யு பாசுவும் உடனிருந்தனர்.

கால்நடைகளை மேம்படுத்துவதில் இந்த அறிக்கையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய திரு ரூபாலா, கொள்கை உருவாக்குபவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதன் பயன்கள் குறித்தும் வலியுறுத்தினார்.

2019-ஆம் ஆண்டில் 20-ஆவது கால்நடை கணக்கெடுப்புடன், இனவாரியான தரவு சேகரிப்பும் செய்யப்பட்டது. தனித்துவமான முயற்சியாக, நாட்டிலேயே முதன்முறையாக, காகிதம் இல்லாமல் டேப்லெட் கணினிகளைப் பயன்படுத்தி இனவாரியான தரவு சேகரிக்கப்பட்டது. தேசிய விலங்கு மரபணு வளங்களின் அலுவலகத்தால் (என்.பி.ஏ.ஜி.ஆர்) அங்கீகரிக்கப்பட்டுள்ள இனங்களின்படி கால்நடைகளும், கோழிகளும் கணக்கிடப்பட்டன.

என்.பி.ஏ.ஜி.ஆர் மூலம் பதிவு செய்யப்பட்ட 19 தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களின் 184 அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு/ வெளிநாட்டு மற்றும் கலப்பின இனங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824647

***************(Release ID: 1824712) Visitor Counter : 164