கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பெரிய துறைமுகங்களில் முடங்கியுள்ள அரசு தனியார் ஒத்துழைப்பு திட்டங்களுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
Posted On:
11 MAY 2022 4:19PM by PIB Chennai
பின்னணி
நாடு முழுவதும் உள்ள பெரிய துறைமுகங்களில், கடந்த தசாப்தங்களில், வடிவமைத்தல், கட்டுதல், முதலீடு, செயல்படுத்துதல் & மாற்றுதல் (DBFOT) அடிப்படையில் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசால் தனியார் முதலீடுகள் வரவேற்கப்பட்டன. 1997-ம் ஆண்டு முதலாவது அரசு தனியார் ஒத்துழைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது முதல், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. தனியார் முதலீடு, திறன் அதிகரித்தல் மற்றும் இயக்கத்திறன் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பலன்கள், இந்தத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு ஆற்றியுள்ளன. தற்போது, ரூ.27 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பீட்டிலான 34 திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதோடு, ரூ.14,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள 25 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரிய துறைமுகங்களின் இயக்கத்திட்டங்களில் ஆண்டுக்கு 350 மில்லியன் டன் திறன் அதிகரித்துள்ளது.
சொத்துக்களை பணமாக்கும் திட்டத்தின் கீழ் 2025-க்குள் 31 திட்டங்கள் ரூ.14,500 கோடி அளவுக்கு வழங்கப்படவுள்ளது. எனினும் பல்வேறு காரணங்களால் சில திட்டங்களின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
பெரிய துறைமுகங்களில் தடைபட்டுள்ள அரசு – தனியார் ஒத்துழைப்பு திட்டங்களுக்கு தீர்வு காண்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய துறைமுகங்கள், கப்பல் & நீர்வழி அமைச்சகம் 10, மே, 2022 அன்று இறுதி செய்துள்ளது.
முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிந்து கொள்ள இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824427
***************
(Release ID: 1824487)
Visitor Counter : 167