விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் அமைச்சர் தலைமையிலான இந்தியக் குழு இஸ்ரேலில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டது

Posted On: 10 MAY 2022 6:33PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை  அமைச்சர்  திரு நரேந்திர சிங் தோமர் தலைமையிலான இந்தியக் குழு இஸ்ரேலில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டது. நவீன வேளாண் ஆராய்ச்சி (ஏஆர்ஓ), வோல்கனி இன்ஸ்டிட்யூட், அல்டா பிரசிஷன் அக்ரிகல்ச்சர் கோ. லிமிடெட் மற்றும் பீர் மில்கா பண்ணை ஆகியவற்றைப் பார்வையிட்டது. துல்லிய வேளாண்மை, தொலையுணர்வு, அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து இந்திய குழுவுக்கு விளக்கப்பட்டது. இந்த பயணத்தின் போது இந்திய குழுவுடன் வேளாண்மை மேம்பாடு குறித்த வாய்ப்பு மிகுந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், நவீன உத்திகளை பயன்படுத்துதல் ஆகியவை குறித்து இந்திய குழு அல்டா பிரசிசன், வேளாண்மை நிறுவனத்திற்கு பயணம் செய்த போது விளக்கி கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெகவ் பாலைவனப்பகுதியில் இந்திய காய்கறிகளை வளர்த்து வரும் இந்திய வம்சாவளி விவசாயிக்கு சொந்தமான பீர் மில்கா பண்ணைக்கும் அமைச்சர் சென்று பார்வையிட்டார்.

***************


(Release ID: 1824235) Visitor Counter : 216
Read this release in: English , Urdu , Hindi , Punjabi