பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் கருத்துரு, நோக்க அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்

Posted On: 07 MAY 2022 10:07AM by PIB Chennai

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் என்ற கருத்துரு, நோக்க அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்றும், முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம், குறிப்பிட்ட அத்தியாவசிய குறியீடுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் வகையில் அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப் பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.

இதற்கு ஏற்றவாறு, மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, சிறப்புக் கவனம் அளிப்பதற்கு, நாடு முழுவதும் 112 மாவட்டங்கள் கண்டறியப்பட்டன.

முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் கீழ் பிகார் மாநிலத்தின் சிதமார்ஹி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகள் பற்றி நேற்று மாலை ஆய்வு செய்த அமைச்சர், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்குவது தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.

போட்டி மற்றும் கூட்டணியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்தத் திட்டம் வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் ஜித்தேந்திர சிங், இதுபோன்ற மாவட்டங்கள் தங்களது மாநிலங்களுக்குள்ளே சிறந்த மாவட்டமாக செயல்பட ஊக்குவிக்கப்பட்டு, பின்னர், மற்றவைகளிடமிருந்து கற்றுக் கொண்டு, அவற்றுடன் போட்டியிட்டு நாட்டின் சிறந்த மாவட்டமாக முன்னேற விரும்புகின்றன என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823404

****


(Release ID: 1823438) Visitor Counter : 267