இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

கேலோ இந்தியா பல்கலைக்கழக இறுதிப்போட்டியில் இருந்து 2 வீரர்களை புரோ கபடி லீகில் இணைத்துக் கொள்ள வேண்டும்: மத்திய அமைச்சர் அனுராத் தாகூர்

Posted On: 03 MAY 2022 6:05PM by PIB Chennai

கோட்டா பல்கலைக்கழகம் மற்றும் சவுத்ரி பன்சி லால் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் அணிகள் இன்று பெங்களூருவில் நடந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு 2021 இல் ஆடவர் கபடியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டன.

 

இன்றைய தொடக்க ஆட்டத்தில் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் மற்றும் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் இடையே நடந்த மகளிர் கபடி  போட்டியில் பெண்கள் மகளிர் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.

 

ஆண்கள் அணியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் ப்ரோ கபடி லீக் 9வது சீசனில், இந்த இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு வீரர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

இந்த இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற கோட்டா பல்கலைக்கழக கேப்டன் ஆசிஷ் கூறுகையில், முதல் பாதியில் நாங்கள் அனைவரும் சற்று பதட்டமாக இருந்தோம் என்று நினைக்கிறேன் என்றும், இரண்டாம் பாதியில் தங்கள் கோச் அறிவுரையின்படி செயல்பட்டதால் தங்கம் வெல்ல முடிந்தது என்றும் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:.   https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822368

*****



(Release ID: 1822415) Visitor Counter : 155