வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஏப்ரல் மாதத்தில் 38.19பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற சாதனையுடன் தொடங்கிய புதிய நிதியாண்டு

Posted On: 03 MAY 2022 2:58PM by PIB Chennai

ஏப்ரல் 2022-ல் 38.19பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மாதாந்திர வர்த்தக ஏற்றுமதி மதிப்பை எட்டி, இந்தியா சாதனை படைத்துள்ளது.  இது, 2921 ஏப்ரலில் 30.75பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போதைய ஏற்றுமதியின் அளவு 24.22% அதிகம் ஆகும்.  பெட்ரோலியம் அல்லாத பொருட்களின் ஏப்ரல் 2022 மாத ஏற்றுமதி மதிப்பு 30.46 பில்லியன் டாலராக அதிகரித்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருநத 27.12பில்லியன் டாலரைவிட 12.32% அதிகம் ஆகும்.  

பெட்ரோலியம் மற்றும் ரத்தினங்கள் அல்லாத பொருட்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மதிப்பு, ஏப்ரல் 2021-ல் இருந்ததைவிட 14.38% அதிகரித்து ஏப்ரல் 2022-ல் 27.16பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 

பெட்ரோலியப் பொருட்கள் (113.21%), மின்னணு சாதனங்கள் (64.04%) மற்றும் ரசாயணப் பொருட்கள் (26.71%) ஏப்ரல், 2022ல் ஏற்றுமதி அதிகரிப்பிற்கு வழிவகுத்தன.  

அதேவேளையில், இந்தியாவின் வர்த்தக இறக்குமதி மதிப்பு ஏப்ரல் 2021-ல் இருந்ததைவிட 26.55% அதிகரித்து 58.26பில்லியன் டாலராக இருந்தது. 

எண்ணெய் அல்லாத, தங்கம் மற்றும் ஆபரணங்கள் அல்லாத (தங்கம், வெள்ளி &  விலை உயர்ந்த உலோகங்கள்) பொருட்கள் இறக்குமதி ஏப்ரல்-2022ல் 29.68% வளர்ச்சி அடைந்து 34.33பில்லியன் டாலரை எட்டியுள்ளது. 

ஏப்ரல் மாத வர்த்தகப் பற்றாக்குறை 20.07 பில்லியன் டாலர் ஆக இருந்தது.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822318

***************



(Release ID: 1822352) Visitor Counter : 234