பாதுகாப்பு அமைச்சகம்
பிசி லால் நினைவு சொற்பொழிவாற்றுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர்
Posted On:
03 MAY 2022 12:39PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங், 5 மே, 2022 அன்று, ஏர் சீஃப் மார்ஷல் பிசி லால் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். இந்திய விமானப்படை சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, புது தில்லி, சுப்ரதோ பூங்காவில், உள்ள விமானப்ப கலையரங்கில், அன்று மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. விமானப்படை தலைமைத் தளபதி ஏர் ஸ்டாஃப் ஏர் சீஃப் மார்ஷல் விஆர்.சவுத்ரி, விமானப்படை சங்கத்தின் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் (ஓய்வு) ஆர்கேஎஸ்.பதூரியா மற்றும், இந்திய விமானப்படையின், இந்நாள் மற்றும் ஓய்வுபெறற் உயரதிகாரிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்கு முந்தைய சொற்பொழிவு நிகழ்ச்சி, 2019-ம் ஆண்டு நடைபெற்றது.
ஏர் சீஃப் மார்ஷல் பிசி லால், 1939-ம் ஆண்டு, இந்திய விமானப்படை பணியில் சேர்ந்தார். 2-ம் உலகப்போர் காலகட்டத்தில், பர்மா தாக்குதலின்போது, தலைசிறந்த ஃபிளையிங் கிராஸ் விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1965 போரின்போது, விமானப்படையின் துணைத்தளபதியாக அவர் பணியாற்றினார். 1966-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தில் அயல் பணியில் இருந்தபோது, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். 1971 போரின்போது, விமானப்படையின் 7-வது தலைமைத் தளபதியாக பதவி வகித்த அவரது தலைசிறந்த தலைமைப்பண்பு, இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததோடு, பங்களாதேஷ் தனிநாடு அமைவதற்கும் வழிவகுத்தது. 1966-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்ட அவருக்கு, இரண்டு போர்களின்போதும் அவரது சிறப்பான பங்களிப்பைக் கவுரவிக்கும் விதமாக 1972-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது. 1973-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்ட அவர் , பின்னர் ஏர் இந்தியா தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
***************
(Release ID: 1822297)
Visitor Counter : 204