எஃகுத்துறை அமைச்சகம்
நிதியாண்டின் தொடக்கத்திலேயே சாதனை படைத்த தேசிய கனிம வளர்ச்சி கழகம்
Posted On:
03 MAY 2022 12:41PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம வளர்ச்சி கழகம் இரும்புத்தாது உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது.
இந்த நிறுவனம் 2022 23 நிதியாண்டில் தொடக்கத்திலேயே, 3.15 மில்லியன் டன் இரும்பு தாது உற்பத்தி செய்து, 3.12 மில்லியன் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இரும்பு தாது உற்பத்தியில் ஏப்ரல் 2021 ஐ காட்டிலும் ஏப்ரல் 2022 இல் 0.6 சதவீதம் அதிகம். விற்பனையில் 0.9 சதவீதம் அதிகம்.
கடந்த நிதியாண்டில் 42 மில்லியன் டன் இரும்பு தாது உற்பத்தியின் மூலம் பெற்ற வலிமயால் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஏப்ரலில் சாதனை படைத்து உள்ளது.
இதுகுறித்து தேசிய கனிம வளர்ச்சி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. சுமித் தேவ் கூறுகையில்,
நிதியாண்டு - 2023 எங்களுக்கு சரியான தொடக்கத்தை அளித்துள்ளது. மேலும் இது நிறுவனத்தின் மூலோபாயத்துடன் இணைந்த எங்கள் குழுவின் கடின உழைப்பின் பிரதிபலிப்பாகும். புதிய தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் மூலம் எங்கள் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துகிறோம் மற்றும் தேசிய கனிம வளர்ச்சி கழகம் தனக்கான எதிர்காலத்தை தயார்படுத்துகிறது. 42 மில்லியன் இரும்புத் தாது உற்பத்தி இலக்கை அடைந்துவிட்டதால், தேசிய கனிம வளர்ச்சி கழகம் எதிர்காலத்தில் 50 மில்லியன் டன் திறன் சுரங்க நிறுவனமாக வளரும் என்று நாங்கள் நம்புகிறோம், என தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822278
***************
(Release ID: 1822295)
Visitor Counter : 199