சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதார அமைச்சர் 'ஆரோக்கிய சிந்தனை முகாம்' நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க உள்ளார்

प्रविष्टि तिथि: 02 MAY 2022 5:08PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மத்திய கவுன்சில் மாநாடான ஆரோக்கிய சிந்தனை முகாமிற்கு அத்துறையின் அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகிக்க உள்ளார்.

மே 5 முதல் 7 ஆம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பாக செயல்பாட்டில் உள்ள சட்டங்கள் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக இந்த சட்டங்கள் மற்றும் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிகளை கண்டறிதல் மற்றும் பரிந்துரைத்தல் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையை சேர்ந்த பேச்சாளர்கள், நிபுணர்கள், தொழில்துறை கூட்டமைப்புகள், நிதி ஆயோக், ஸ்டார்ட் அப்கள், கல்வி நிறுவனர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

குறைந்த கட்டணத்தில் எளிதில், அனைவருக்கும் ஒரே சமமான சிகிச்சை வசதிகள் கிடைக்க செய்தல், சுகாதார அவசர நிலையை சமாளிக்கும் கட்டமைப்பை உருவாக்குதல், ஆரோக்கியமான மாநிலம், ஆரோக்கியமான தேசம் என்னும் நிலையை அடைய மாநிலங்களுடன் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822027

***************


(रिलीज़ आईडी: 1822080) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati