சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை (மே 2) சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கானில் ஒருங்கிணைந்த பிராந்திய மையத்திற்கு (CRC) அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 01 MAY 2022 12:49PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் சத்தீஸ்கரில் உள்ள ராஜ்நந்த்கானில் அமையவுள்ள மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையத்தின் (CRC) புதிய கட்டிடத்திற்கு நாளை காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிகழ்வில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் திருமதி. பிரதிமா பவுமிக், சத்தீஸ்கர் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் திரு. சந்தோஷ் பாண்டே மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, தகுதியுள்ள 500 பயனாளிகளுக்கு ரூ. 33,28,681 மதிப்பில் உதவி மற்றும் உபகரணம், கற்றல் மற்றும் கற்பித்தல் கருவிகள் வழங்கப்பட உள்ளன.

ராஜ்நந்த்கானில் செயல்படும் மாற்றுத்திறனாளிகளின் திறன் மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையம் கடந்த 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு தற்காலிக கட்டட்டத்தில் இயங்கி வருகிறது.

 ரூ.24.28 கோடி மதிப்பீட்டில் 4,105.22 சதுர மீட்டர் அளவில் இந்த புதிய கட்டடம் அமையவுள்ளது.

பிசியோதெரபி, கேட்டல் மற்றும் பேசுதல் பயிற்சி, சிறப்பு கல்வி, சிறப்பு உபகரண கருவிகளை இயக்குதல், மனித வள மேம்பாடு, மன நல ஆலோசனை, அறிவு சார் குறைபாடு உடையவர்களுக்கான கருவிகள் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்த மையம் அமைய உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821760

***************



(Release ID: 1821795) Visitor Counter : 266


Read this release in: English , Urdu , Hindi , Telugu