தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூர்தர்ஷன் தயாரிக்கும் செல்லப்பிராணி குறித்த நிகழ்ச்சிக்கு விருது

Posted On: 01 MAY 2022 12:25PM by PIB Chennai

முக்கியமான, தரமான உள்ளடக்கத்தை தயாரிப்பதில் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் டி டி நேஷனல் தயாரித்த செல்லப்பிராணி பராமரிப்பு அடிப்படையிலான டிவி தொடர் சிறந்த  இந்தி தொடருக்கான  எக்ஸ்சேஞ்ச் பார் மீடியா  நியூஸ் பிராட்காஸ்டிங் விருதுகள் 2021(ENBA) ஐ வென்றுள்ளது. 

எப்போதும் சிறந்த நண்பன் (Best friend forever) என்ற பெயரில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் இந்த லைவ் ஷோவில் செல்லப் பிராணிகளைக் கவனித்துக் கொள்ளுதல், அவற்றுக்கான உணவு, மருத்துவ உதவி, இருப்பிடம், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து நேயர்களின் கேள்விகளுக்கு செல்லப்பிராணி பராமரிப்பு நிபுணர்கள் பதில் அளிப்பார்கள்.

வயது வித்தியாசமின்றி இந்தியா முழுவதிலுமிருந்து செல்லப்பிராணி பிரியர்களிடம் இருந்து வந்த போன் அழைப்புகள் மூலம் இந்த நிகழ்ச்சி வெகுவாக பிரபலமாகி உள்ளது.

ஒருவர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வது மற்றும் செல்லப்பிராணிகள் நமது உயிரை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் நமது மன அழுத்தத்தை எவ்வாறு போக்குகிறது என்பது பற்றிய கதைகளை இந்நிகழ்ச்சி கொண்டுள்ளது.  இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும் டிடி நேஷனல் யூடியூப் சேனலிலும் கிடைக்கிறது.  இதுவரை வெளியான அனைத்து அத்தியாயங்களையும் பார்க்க https://www.youtube.com/playlist?list=PLUiMfS6qzIMzRVOMb92wfgGf22hgVo8p6 என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி கொடுப்பது காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821756

***************


(Release ID: 1821770) Visitor Counter : 239