பாதுகாப்பு அமைச்சகம்

2021-22 நிதியாண்டில் ஜிஇஎம் மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் இதுவரை இல்லாத உயரளவாக ரூ.15,000 கோடியை எட்டியுள்ளது

Posted On: 30 APR 2022 1:37PM by PIB Chennai

2021-22 நிதியாண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கொள்முதல் ஆர்டர்கள் அரசின் இணைய-சந்தை மூலம் இதுவரை இல்லாத அளவிலான ரூ.15,047.98 கோடியை எட்டியது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 250 சதவீதம் அதிகமாகும். டிஜிட்டல் மயத்தின் மூலம் பழைய ஒப்பந்தப்புள்ளி முறைகளை சீரமைக்கவும், அரசு கொள்முதல்களில் அதிக நன்னடத்தை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் ஆகஸ்ட் 2016-ஆம் ஆண்டு இந்த ஜிஇஎம் தொடங்கப்பட்டது. ஜிஇஎம் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே,  பாதுகாப்பு அமைச்சகம் டிஜிட்டல் முறையைத் தழுவி இந்தப் பாதையில் முழுமையான உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது. களத்தில் பல சவால்கள் இருந்தும் இந்த முடிவுகள் பிரமிக்க வைக்கின்றன.

டிஜிட்டல் இந்தியாவுடன் ஒத்துப்போகும் வகையில் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் அரசின் பார்வைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

***************



(Release ID: 1821602) Visitor Counter : 169