இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தகவல் தொகுப்பு ; குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தின் ஜெட்லி சிங் தங்கம் வென்றார் ; துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தையில் பல பின்னடைவுகள், கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் தடகள பிரிவுக்கு தயார் நிலை

Posted On: 30 APR 2022 9:28AM by PIB Chennai

கேலோ இந்தியா பல்கலைக்கழக  விளையாட்டு போட்டிகளில்  தடகள போட்டிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இன்றைய போட்டிகள் உயர்ந்த பட்ச செயல்திறனுடன் முடிவடைந்தது. இன்றைய போட்டிகளின் நிறைவில் 42 பல்கலைக்கழகங்கள்  தலா ஒரு தங்கப்பதக்கத்தை வென்றன. 92 பல்கலைக்கழகங்கள் பதக்கப்பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

 குருநானக் தேவ்  பல்கலைக்கழகத்தின் சிங்காகாம் ஜெட்லி  சிங் வாள் வீச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

லவ்லி புரோஃபஷனல் பல்கலைக்கழகத்தின் சர்தாஜ் சிங் திவானா, 50 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஒலிம்பிக் வீரர் ஐஷ்வாரி பிரதாப்சிங்  தோமரை இறுதிப்போட்டியில் வென்று தங்கப்பதக்கம் பெற்றார்.

வில்வித்தை பிரிவில் தகுதிச்சுற்றின்போது. முதலிடத்தில் இருந்த லவ்லி புரோஃபஷனல் பல்கலைக்கழகத்தின் ஆதித்ய சவுத்திரி சரண்சிங் பல்கலைக்கழகத்தின் நிஷாந்திடம் தோல்வி அடைந்தார்.

தடகள போட்டியில் ஆசிய விளையாட்டுகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற டுட்டி சந்த் உள்ளிட்ட இளம் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள் பங்கேற்றனர். 400 மீட்டர் ஓட்டப்பந்தய பிரிவில் பிரியா மோகன்,  நீளம் தாண்டுதல் பிரிவில் ஆன்சி சோஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 மேலும் விவரங்களுக்கு  இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்;  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821455

***************


(Release ID: 1821455



(Release ID: 1821560) Visitor Counter : 144