இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

திரைக்குப் பின்னால்: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகளில் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தேவைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது

Posted On: 29 APR 2022 5:17PM by PIB Chennai

பெங்களூருவில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 3,800-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். பங்கேற்பாளர்களுக்கு அறிவியல் பூர்வமாகத் திட்டமிடப்பட்ட உணவு வகைகள் மூலம் ஊட்டச்சத்து மற்றும் உணவுத் தேவைகளை  அமைப்பாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

போட்டி அறிவிக்கப்பட்டதிலிருந்து உணவு பட்டியலை திட்டமிடுவதில் ஈடுபட்ட பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஊட்டச்சத்து நிபுணர் நம்ரதா பிரமோத், மெனுவை வகுக்கும் உத்தியை விளக்கினார்.

"நாங்கள் வழங்கும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் உள்ள மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உட்பட பல கூறுகளை நாங்கள் கவனத்தில் கொண்டோம். விளையாட்டு வீரர்களின் நீர் சத்துடன் திகழ்வதையும் நாங்கள் கவனித்துக்கொண்டோம். சாறு, பால் மற்றும் பழங்களை அவர்கள் பெறுவதை உறுதிசெய்தோம்," என்று நம்ரதா கூறினார். 

மல்யுத்த வீரர்கள், குத்துச்சண்டை வீரர்கள் மற்றும் பளுதூக்குபவர்கள், கடுமையான எடை வரம்புகளை பராமரிக்க வேண்டும். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான விருப்பங்களும் மெனுவில் உள்ளன, இதனால் அவர்கள் விரும்பிய பலன்களை அடைய முடியும்.

"எந்தவொரு மல்யுத்த வீரர்களும் எடையைக் குறைக்கவோ அல்லது பராமரிக்கவோ விரும்பினால், அவர்களுக்கு உதவும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வதற்கான விருப்பங்கள் மெனுவில் உள்ளன. நிறைய பழங்கள் மற்றும் சாலட் விருப்பங்களும் உள்ளன," என்று 87 கிலோ மல்யுத்த போட்டியில் போட்டியிடும் குர்கான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த தீபக் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821308

***************


(Release ID: 1821402) Visitor Counter : 151
Read this release in: English , Urdu , Hindi