பிரதமர் அலுவலகம்
சிவில் சர்வீசஸ் தினத்தன்று பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் பிரதமர் விருதை வழங்கும் நிகழ்வில் பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்
Posted On:
21 APR 2022 10:09PM by PIB Chennai
எனது அமைச்சரவை சகாக்களான டாக்டர் ஜிதேந்திர சிங் அவர்களே, பி கே மிஸ்ரா அவர்களே, ராஜீவ் கௌபா அவர்களே, வி ஸ்ரீனிவாசன் அவர்களே மற்றும் இங்கு குழுமியுள்ள அனைத்து சிவில் சர்வீஸ் உறுப்பினர்களே, நாடு முழுவதிலுமிருந்து காணொலி மூலம் கலந்து கொண்டுள்ள சகாக்களே, தாய்மார்களே, பெரியோர்களே, அனைத்து கர்ம யோகிகளுக்கும் சிவில் சர்வீசஸ் தின நல்வாழ்த்துகள். இன்று இந்த விருதுகளைப் பெற்ற நண்பர்களுக்கும், அவர்களின் ஒட்டுமொத்த குழுவிற்கும் அவர்கள் சார்ந்த மாநிலங்களுக்கும் வாழ்த்துகள்.
அனைத்து பயிற்சி அகாடமிகளும் வாராந்திர அடிப்படையில் விருது வென்றவர்களின் செயல்முறை மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இரண்டாவதாக, விருது பெற்ற திட்டங்களில் இருந்து, ஒரு சில மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கு ஒரு திட்டத்தை தேர்வு செய்து, அதன் அனுபவத்தை அடுத்த ஆண்டு குடிமைப் பணிகள் தினத்தில் விவாதிக்கலாம்.
கடந்த 20-22 ஆண்டுகளாக அரசு ஊழியர்களுடன் முதலில் முதலமைச்சராகவும் பின்னர் பிரதமராகவும் நான் தொடர்பில் உள்ளேன். பரஸ்பரம் கற்கும் அனுபவமாக இது உள்ளது. இந்த சிறப்புமிக்க விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில் முன்னாள் மாவட்ட நிர்வாகிகளை மாவட்டத்திற்கு வரவழைக்க வேண்டும். மாவட்டத்தில் புதிய ஆற்றலை இது புகுத்துவதுடன், கடந்த கால அனுபவத்தின் வாயிலாக தற்போதைய மாவட்ட நிர்வாகத்தின் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்க ஆற்றலை வழங்கும்.
இதேபோல், சுதந்திர இந்தியாவின் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய நிர்வாக இயந்திரத்தின் கொடியை ஏந்தியவர்களை நினைவுகூரவும், பயன் பெறவும், மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அமைச்சரவை செயலர்களை இந்த மைல்கல் ஆண்டில் மாநில முதல்வர்கள் அழைக்கலாம். விடுதலையின் அமிர்தப் பெருவிழா ஆண்டில் குடிமைப் பணியை கௌரவிக்க இது ஒரு பொருத்தமான வழியாகும்.
இந்தியா@100 என்பது வழக்கமானதாக இருக்க முடியாது. இந்த 25 ஆண்டு காலத்தை ஒரு அலகாகப் பார்க்க வேண்டும், இப்போதிலிருந்தே நமக்கு ஒரு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். இந்த கொண்டாட்டம் முக்கியமானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் இந்த உணர்வோடு முன்னேற வேண்டும். முயற்சிகளில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது, 1947-ம் ஆண்டு இந்த நாளில் சர்தார் படேல் அளித்த உறுதிமொழிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது.
சாதாரண மனிதனின் கனவுகளை உறுதியான நிலைக்கு கொண்டு செல்வது அமைப்பின் பொறுப்பாகும். அதை நிறைவேற்றுவதற்கான உறுதியை நாம் அனைவரும் ஏற்க வேண்டும். அதுவே நம் அனைவருக்கும் குறிக்கோளாக இருக்க வேண்டும். கனவு முதல் தீர்வு முதல் நிறைவு வரையிலான இந்த பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கைகோர்த்து இருக்க வேண்டும்.
குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818847
***************
(Release ID: 1821261)
Visitor Counter : 116
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam