நித்தி ஆயோக்

முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் திட்டம் குறித்த மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு

Posted On: 28 APR 2022 1:02PM by PIB Chennai

சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் திட்டம் குறித்த ஒரு நாள் மாநாட்டிற்கு நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்தது.

‘பங்கேற்பின் மூலம் செழுமை’ என்ற தலைப்பிலான இந்த மாநாட்டில், முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பு அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள் மற்றும் நித்தி ஆயோக்கின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘மாற்றத்தின் கதைகள்’ என்ற தலைப்பில் முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களின் 30 புதுமை முயற்சிகளும் இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது.  பழக்கவழக்க கொள்கைகள் பயன்பாடு, புதுமை கண்டுபிடிப்புகள், பிரதிபலிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த புதுமை முயற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மாநாட்டில் பேசிய நித்தி ஆயோக்கின் உறுப்பினர் டாக்டர் வி கே பால், மகப்பேறு மற்றும் குழந்தை ஆரோக்கிய திட்டங்களை செயல்படுத்துவதில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம் என்றார். மேலும் அரசின் சுகாதார சேவைகள் குக்கிராமத்தில் இருப்பவர்களுக்கும் கிடைக்கச் செய்ய கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநாட்டில் பேசிய நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதாப்காந்த், ‘வளர்ச்சித் திட்ட பங்குதாரர்கள் அடித்தட்டு அளவில் அரசுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சிறந்த வாய்ப்பாக முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் திட்டம் உருவெடுத்துள்ளது. பங்குதாரர்களின் தீவிர செயல்பாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது’ என்றும் தெரிவித்தார். மாவட்ட அளவிலான குழுக்கள் மற்றும் வளர்ச்சிப் பங்குதாரர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு, திட்டங்களின் பலனை மேம்படுத்துவதில் எந்தளவிற்கு பயன்படுகிறது என்பதையும் அவர் விளக்கி கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820880

***************



(Release ID: 1820912) Visitor Counter : 175