எரிசக்தி அமைச்சகம்

புவியீர்ப்பு அடிப்படையில் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்திற்கான Energy Vault Holdings, Inc. நிறுவனத்துடன் தேசிய அனல் மின் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 27 APR 2022 2:58PM by PIB Chennai

நாட்டின்  மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிறுவனத்தில்,  Energy Vault Holdings, Inc.  (“எனர்ஜி வால்ட்) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று கையெழுத்திடுவதாக அறிவித்தது. இணைந்து செயல்படுவதற்கான  சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் எனர்ஜி வால்ட் நிறுவனத்தின்  EVx™ புவிஈர்ப்பு-அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தீர்வுகளை பயன்படுத்துவதற்கான நீண்டகால கூட்டாண்மை உக்தியை  முறைப்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். எனர்ஜி வால்ட் நிறுவனத்தின் ஈர்ப்பு விசை அடிப்படையிலான ஆற்றல் சேமிப்பு அமைப்புக்கான கலப்புத் தொகுதிகளை உற்பத்தி செய்வதற்கு நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பத்தை  வழங்குகிறது.

தேசிய அனல் மின் நிறுவனத்தின் "ஒரு பெரிய, ஒருங்கிணைந்த மின் உற்பத்தியாளர் என்ற வகையில், நாட்டின்  பொருளாதாரத்தை டிகார்பனைஸ் செய்ய பலதரப்பட்ட தூய்மை எரிசக்தி பிரிவுகளை  கொண்டிருப்பது தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு முக்கியதத்துவம் வாய்ந்தது என்று அந்நிறுவனத்தின் தலைவர்  மற்றும் நிர்வாக இயக்குனர் குர்தீப் சிங் தெரிவித்துள்ளார். நாட்டின் எரிசக்தி மாற்றத்திற்கான இலக்குகளை எட்டும் வகையில்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தித திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இலக்குகளை அடைய சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தி , 24-மணிநேரமும் மின் விநியோகம் மற்றும் கலப்பின திட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருவதாக அவர் கூறினார். நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்துவதன் மூலம் நிலையான அணுகுமுறையின் கீழ்கலப்புத் தொகுதிகளை உற்பத்தி செய்வதற்கும், ஆற்றல் மாற்ற இலக்குகளை அடைவதற்கும், எனர்ஜி வால்ட் நிறுவனத்தினுடனான ஒப்பந்தம், உதவிடும். இதன் மூலம் இந்த ஒத்துழைப்பு ஒரு சுழற்சிப் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும்.

தேசிய அனல் மின் நிறுவனத்துடனான கூட்டாளியாக இருப்பதிலும், அதன் சுத்தமான எரிசக்தி மாற்றத்தில் இந்தியாவின் மிகப்பெரிய மின்சக்தியை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்று எனர்ஜி வால்ட் நிறுவனத்தின் தலைவர், இணை நிறுவனர் மற்றும் சித்தலைமைச் செயல் அதிகாரி ராபர்ட் பிகோனி கூறினார். இதன்படி, எரிசக்திக்கான மிகப்பெரிய உலகளாவிய சந்தைகளில் ஒன்றாக விரிவடைவதன் மூலம் அந்த இலக்கை நோக்கி மேலும் முன்னேற்ற பாதையில் செல்வதைக் த்தைக் குறிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820467

***************



(Release ID: 1820531) Visitor Counter : 119