ஜல்சக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வெற்றிக் கதை: கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம்

Posted On: 27 APR 2022 12:01PM by PIB Chennai

கங்கை நதி மாசு அடைவதை தடுக்கும் வகையிலும் தூய்மையாக இருக்கும் வகையிலும் பராமரிப்பதற்கான முயற்சியில்மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹவுரா மாவட்டக் கவுன்சில்உள்ளூர் பஞ்சாயத்து சமிதிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி சமூகங்களின் ஆதரவுடன் கங்கை நதிக்கரையில் 18 இடங்களில் உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகளின் உதவியுடன்  நெகிழிப்  (பிளாஸ்டிக்பொருட்களை அகற்றும் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை (SLWM) மூலம் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும் காட்சி  கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின்  (SBM-G) இரண்டாம் கட்ட பணிகளை 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

மாநில அரசின் நடவடிக்கைகளுடன் கூடுதலாகஹவுரா மாவட்டக் கவுன்சில் மற்றும் கங்கை நதியை ஒட்டி அமைந்துள்ள அனைத்துத் தொகுதிகளும் மற்றும் அதிலுள்ள கிராமப் பஞ்சாயத்துகள்சமூக ஆதரவு அமைப்பான ஆம்ரா சுசாமா ஜலபிரபாத்தின் ஆதரவுடன் புனித கங்கை நதியை தூய்மையாகவும் மாசுபடாமல் வைத்திருக்கவும் முன்வந்துள்ளனர்.

முன்முயற்சியின் நோக்கங்கள்:

•          மீன்ஊர்வனடால்ஃபின்கள் மற்றும் நதியில் வாழும் பிற உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் உயிரியில் -பன்முகத்தன்மை மறுசீரமைப்பு

•          நீருக்கடியில் / நீர்வாழ் சூழலியல் அமைப்பு மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு

•          விவசாயப் பயன்பாடுகளுக்கான சுத்தமான தண்ணீரை வழங்கும் போது கங்கை நதி சுத்தமாக இருப்பதை உறுதி செய்வது

•          ஆற்றின் ஆழத்தை பராமரிப்பதன் மூலம் நீர்வழிப்  போக்குவரத்து திறனை மேம்படுத்துதல்

•          கங்கை நதியை ஒட்டிய பகுதிகளில் உள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்

முக்கிய நடவடிக்கைகள்:

மேற்கூறிய இலக்குகளை அடைவதற்கான முயற்சியாகஹவுரா மாவட்டக் கவுன்சில்கிராமப்புறப் பஞ்சாயத்துகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதுபிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணிகள் ஹவுராவில் உள்ள கங்கை நதியை  ஒட்டியுள்ள 18 கிராமப்புறப் பஞ்சாயத்துகளில் சுய உதவிக்கு குழுக்களின் ஆதரவுடன்தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1820414

 

 

 ***************


(Release ID: 1820499) Visitor Counter : 152