இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு தடகள வீரர் வீராங்கனைகளுக்கும் அதன் சிறப்பை உணர வைத்துள்ளது: ஸ்ரீவள்ளி ராஷ்மிகா

Posted On: 26 APR 2022 4:46PM by PIB Chennai

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, இளையோர் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகிறார். 20-வயது இளம் வீராங்கனையான அவர் ஏற்கனவே இரண்டு AITA ஜூனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2018-ல்  ரோலண்ட்-காரோஸ் நடத்திய போட்டியில்  வெற்றி பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பாரிஸில் நடைபெறும் ஜூனியர் ரோலண்ட்-காரோஸ் போட்டியில்  வைல்டு கார்டு மூலம் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ITF டென்னிஸ் போட்டியில்  ராஷ்மிகா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். தனது டென்னிஸ் விளையாட்டில் மேலும்  வலு சேர்ப்பதில் அவர் கவனம் செலுத்துகிறார்.

பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி-2021-ல்  ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் சார்பில் ராஷ்மிகா பங்கேற்கிறார்.

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில்  தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்ட  ராஷ்மிகா, “இது போன்ற பல பெரிய  விளையாட்டுப்  போட்டிகளை ஏற்பாடு செய்வது எளிதானது அல்ல என்று கூறினார். ஆனால் கேலோ விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் கவனமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  போட்டி அமைப்பாளர்களின் பணி மகத்தானது என்றும் தெரிவித்தார். விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான இட வசதிகள்,  ‘வாழும் கலைஅனுபவத்தை அளிப்பதாக உள்ளது என்றும், இது விளையாட்டு வீரர்கள் தியானம் செய்ய உதவுவதுடன்  போட்டி குறித்த மன வலிமையை அதிகரிக்க  முக்கிய அம்சமாக இருப்பதாக அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1820163

 

********



(Release ID: 1820260) Visitor Counter : 95


Read this release in: English , Urdu , Hindi , Punjabi