நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ரபி பருவத்தில் 2022-23-ம் ஆண்டில், 136.93 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை 11 மாநிலங்களிலிருந்து (24.04.2022 வரை) கொள்முதல் செய்யப்பட்டது
प्रविष्टि तिथि:
25 APR 2022 4:27PM by PIB Chennai
மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்ராகண்ட், சண்டிகர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 11 மாநிலங்களில் இருந்து ரபி பருவத்தில், 2022-23-ம் ஆண்டில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் நடைபெற்று வருகிறது.
24.4.2022 வரை,136.93 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.99 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையாக 27,592.10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2021-22-ம் ஆண்டில் கரிஃப் பருவத்தில் மத்திய தொகுப்பின் கீழ் நெல் கொள்முதல் பணிகள் பல்வேறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் சீராக நடைபெற்று வருகிறது.
24.4.2022 வரை, 757.27 லட்சம் மெட்ரிக் டன் நெல் (காரிஃப் பயிர் 751.39 லட்சம் மெட்ரிக் டன் மற்றும் ராபி பயிர் 5.87 லட்சம் மெட்ரிக் டன் உட்பட) கொள்முதல் செய்யப்பட்டு, 109.33 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். குறைந்த பட்ச ஆதரவு விலையாக, 24.48 கோடி ரூபாய் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819851
***************
(रिलीज़ आईडी: 1819950)
आगंतुक पटल : 222