ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் குறித்த 7-வது சர்வதேச மாநாட்டை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்

Posted On: 25 APR 2022 4:22PM by PIB Chennai

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் குறித்த 7-வது சர்வதேச மாநாடு 2022-ஐ மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கிவைத்தார்.  ஏப்ரல் 25 முதல் 27 வரை  இந்த வருடாந்திர 3 நாள் மாநாடு புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும்.

நாட்டில் மருத்துவமனை, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள், முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாம் நிலை கவனிப்பு மையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு, மருத்துவர்கள், மருத்துவ நிறுவனங்கள், ஆகியவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசின் அயராத உழைப்புக் காரணமாக இந்தியாவில் சுகாதார கவனிப்பு என்பது செலவு குறைந்ததாகவும் எளிதில் கிடைப்பதாகவும் மாறியுள்ளது என்று இந்த மாநாட்டில் பேசிய டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் குறித்த 7-வது சர்வதேச மாநாடு 2022 போன்ற மாநாடுகள் தொழில்துறையினர், கல்வியாளர்கள், கொள்கை உருவாக்குவோர் ஆகியோருக்கு ஒரு சிந்தனை தளத்தை அளிப்பதோடு இந்தத் துறைக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கான நகல் திட்டத்தையும் வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்த மருந்து தொழில்துறையைப் பாராட்டிய மத்திய அமைச்சர், கொவிட்-19  பெருந்தொற்றை இந்தியா சமாளித்த முறை உலகளாவிய ஆய்வுக்கு உதவியிருக்கிறது என்றார். உலகின் மிகப் பெரிய தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்ட இந்தியாவின் முயற்சிகளை ஒட்டுமொத்த உலக சமூகம் பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் பேசிய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு பக்வந்த் கூபா, உலகில் மருந்து உற்பத்தியை குவி மையமாக உள்ள இந்தியா, உலகிலேயே 5-வது இடத்தில் உள்ளதாக கூறினார். இந்திய மருத்துவக் கருவிகள்  உற்பத்தியின் மதிப்பு தற்போது 11 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்றும் 2025 வாக்கில் இது 50 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.  தற்போது 80 சதவீத மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்யும் இந்தியா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு காரணமாக விரைவில் 80 சதவீத மருத்துவக் கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்பதை அவர் எடுத்துரைத்தார்.

கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் இந்திய சூழல் மீது மருந்து உற்பத்தித் துறையின் தாக்கம், இந்திய மருத்துவ கருவிகள் துறையில் வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான வாய்ப்பு,  தலைமை நிர்வாக அதிகாரிகளின் முக்கிய உரைகள் தொகுப்பு ஆகிய மூன்று ஆவணங்களை தொடக்க நிகழ்வில் டாக்டர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

இந்திய மருந்து தயாரிப்பு தொழில்துறை இந்தாண்டின் மையப் பொருளாக ‘இந்திய மருந்து தயாரிப்பு – தொலைநோக்கு 2047: எதிர்காலத்திற்கான மாறுதலுக்குரிய செயல் திட்டம்’ என்பதைக் கொண்டுள்ளது. அதே போல் ‘புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சேவைகள் மூலம் சுகாதார கவனிப்பில் மாற்றம்’ என்பது இந்திய மருத்துவக் கருவிகள் உற்பத்தித் துறையின் மையப்பொருளாகும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819849

***************


(Release ID: 1819919) Visitor Counter : 337