தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் 2022-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்திற்கான (IDY) கவுண்ட்டவுன் திரு அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெறுகிறது

Posted On: 25 APR 2022 2:31PM by PIB Chennai

அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், ஏற்பாடு செய்துள்ள 2022-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்திற்கான (IDY) கவுண்ட்டவுன் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய  தகவல் தொடர்புத்துறை  அமைச்சர், திரு  அஷ்வினி வைஷ்வ் மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர், திரு  தேவுசின் சவுகான் (குஜராத் மாநிலம் நாடியாட்டில் இருந்து காணொளி வாயிலாக  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.), அஞ்சல்துறை  செயலாளர், தொலைத் தொடர்புத்துறை செயலாளர், அஞ்சல் துறை சேவைகள் பிரிவு தலைமை இயக்குனர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். புது தில்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் முக்கிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, அங்கு, தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் 150-க்கும் மேற்பட்ட  அஞ்சல்துறை மற்றும் தொலைத்தொடர்புத்துறை அதிகாரிகள்  நேரடியாக பங்கேற்றனர்.

சுமார் 50,000 அஞ்சல் நிலையங்களில் இருந்து கிராமின் டாக் சேவாக்ஸ் உட்பட 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், முக்கிய நிகழ்வு நடைபெறும் தளத்துடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை, ஒடிசா மாநிலம் கொனார்க் - சூரியக் கோயில்,ஸ்ரீநகர் - மிதக்கும் அஞ்சல்  அலுவலகம்,  ராஜஸ்தான், சித்தோர்கர் கோட்டை, கன்னியாகுமரி (தமிழ்நாடு) சாஞ்சி (எம்.பி.) விவேகானதா நினைவுப் பாறை ,  போன்ற இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலக  ஊழியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி பாரத் விசி, என்ஐசி, வெப்காஸ்ட் மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை ஒரு மணி நேரம் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வரவிருக்கும் 2022-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக கவுன்ட்டவுன் திட்டத்தைப் தகவல் தொடர்பு அமைச்சர், திரு அஷ்வினி வைஷ்ணவ், பாராட்டினார். யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், யோகாவை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றவும் இது போன்ற நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். அஞ்சல்காரர்கள் மற்றும் ஜி.டி.எஸ் ஊழியர்களுக்கு யோகா பயிற்சியை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றும், அவர்கள் அஞ்சல் துறையின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். மேலும், அடுத்த இரண்டு மாதங்களில், அஞ்சல்  நிலையங்களுக்குச் செல்லும் அனைத்து குடிமக்களுக்கும் யோகா மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் திரு தேவுசின் சவுகான் தனது உரையில் யோகாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நமது உடலின் ஆரோக்கியத்துடன், அதைவிட முக்கியமாக மனது மற்றும் ஆன்மாவுக்கும் இந்திய கலாசாரத்தை புதுப்பித்ததற்காகவும், நமது செழுமையான கலாச்சார பாரம்பரியத்தில் இந்தியர்களை பெருமைப்படுத்தியதற்காகவும் பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819815

***************



(Release ID: 1819863) Visitor Counter : 519