பிரதமர் அலுவலகம்

செங்கோட்டையில் ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

Posted On: 21 APR 2022 11:36PM by PIB Chennai

மேடையில் இருக்கும் அனைத்துப் பிரமுகர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்களுக்கும், காணொலி மூலம் உலகெங்கிலும் இருந்து கலந்து கொண்டுள்ள அனைத்துப் பிரமுகர்களுக்கும் வணக்கம்!

குரு தேக் பகதூர் அவர்களின் 400-வது பிறந்த நாள் விழாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன். ஷபாத் கீர்த்தனையைக் கேட்டவுடன் நான் உணர்ந்த அமைதியை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். 

இன்று குருவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அஞ்சல்தலை மற்றும் நாணயத்தை வெளியிடும் பாக்கியம் எனக்கு கிடைத்தது நம் குருக்களின் ஆசிர்வாதம் என்று நான் நம்புகிறேன். முன்னதாக 2019-ல் குரு நானக் தேவ் ஜியின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் பாக்கியத்தைப் பெற்றோம், 2017-ல் குரு கோவிந்த் சிங் ஜியின் 350-வது பிறந்த நாளை கொண்டாடினோம்.

இன்று நமது நாடு முழு பக்தியுடன் நமது குருக்களின் லட்சியங்களில் முன்னேறி வருவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நல்ல சந்தர்ப்பத்தில், குருக்களின் பாதங்களில் மரியாதையுடன் வணங்குகிறேன். உங்கள் அனைவருக்கும், அனைத்து நாட்டு மக்களுக்கும், குருவாணி மீது நம்பிக்கை கொண்டுள்ள உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் பிரகாஷ் பர்வ் திருநாளில் எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நண்பர்களே,

பல முக்கியமான காலகட்டங்களுக்கு சாட்சியாக செங்கோட்டை இருந்து வருகிறது. இந்தக் கோட்டை குரு தேக் பகதூர் சாஹிப் அவர்களின் தியாகத்தைக் கண்டதோடு மட்டுமின்றி, நாட்டிற்காக தியாகம் செய்த மக்களின் மனதையும் கண்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், பல இந்தியக் கனவுகள் இங்கிருந்து எதிரொலித்தன. எனவே, விடுதலையின் அமிர்தப் பெருவிழா நிகழ்ச்சியின் போது, ​​செங்கோட்டையில் இந்த நிகழ்வு நடைபெறுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது.

நண்பர்கள்,

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தால் இன்று நாம் சென்றடைந்துள்ள இடம் சாத்தியமாகியுள்ளது. சுதந்திர இந்தியா, ஜனநாயக இந்தியா, தானே முடிவெடுக்கும் இந்தியா என்ற கனவை நனவாக்க கோடிக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். இந்தியா உலகத்திற்கு தொண்டின் செய்தியை பரப்புகிறது.  

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, நம்முடையது ஒரு சிறந்த பாரம்பரியம் மற்றும் சிறந்த கலாச்சாரம்.

ரிஷிகளும், முனிவர்களும், குருக்களும் தங்களின் பல்லாயிரக்கணக்கான வருட தவத்தால் இந்நிலத்தை அழகுபடுத்தி, தங்கள் சிந்தனைகளால் வளப்படுத்தியுள்ளனர். இந்த பாரம்பரியத்தை போற்றும் வகையில், குருக்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர்.

எனவே நண்பர்களே,

பல ஆண்டுகால காலனித்துவத்திலிருந்து இந்தியாவின் சுதந்திரத்தை இந்தியாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பயணத்திலிருந்து தனித்து பார்க்க முடியாது. அதனால் தான்; இன்று நாடு விடுதலையின் அமிர்த பெருவிழாவைக் கொண்டாடுகிறது. 

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான தமிழாக்கம் இதுவாகும். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818857

********  
 



(Release ID: 1819530) Visitor Counter : 168