அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜம்முவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் வழங்குவதை நோக்கமாக கொண்ட சிஎஸ்ஐஆர்-ஐஐஐஎம் பயோநெஸ்ட்- பயோ இன்குபேட்டரை மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தொடங்கிவைத்தார்
Posted On:
23 APR 2022 3:56PM by PIB Chennai
ஜம்மு பிராந்தியத்தில் ஸ்டார்ட் அப்களை ஊக்குவித்து, மாற்று வாழ்வாதாரத்தை வழங்கும் வகையில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், நிதி, தொழில்நுட்பம், போக்குவரத்து என அதன் பல்வேறு முகமைகள் மற்றும் துறைகள் மூலம் பல வழிகளில் ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஊக்குவிப்பு காரணமாக, ஜம்முவில் உள்ள சிஎஸ்ஐஆர்- ஐஐஐஎம் உடன் 64 ஸ்டார்ட் அப்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன. இதில் 14 பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. 4 ஏற்கனவே சந்தையை அடைந்துள்ளது.
இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் ( தனிப்பொறுப்பு), புவி அறிவியல் ( தனிப்பொறுப்பு)< பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங், பயோநெஸ்ட்-பயோ இன்குபேட்டரை இன்று காலை துவங்கிவைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது மாற்று வாழ்வாதாரத்துக்கான ஆதார வளமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இந்த வழிகாட்டுதல் மையத்தை தொடங்கி வைத்து, ஸ்டார்ட் அப்களுடன் கலந்துரையாடிய டாக்டர் ஜித்தேந்திர சிங், நாளை பஞ்சாயத் ராஜ் தினக் கொண்டாட்டத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி சம்பா மாவட்டம் பள்ளியில் கலந்து கொள்ளவுள்ள பேரணி பற்றி குறிப்பிட்டார். இது தொழில்நுட்ப கண்காட்சிக்கான ஊக்குவிப்பாக அமையும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819293
---
(Release ID: 1819325)
Visitor Counter : 212