நித்தி ஆயோக்
‘புதுமையான வேளாண்மை’ குறித்த ஒருநாள் கருத்தரங்கை நிதி ஆயோக் வரும் 25-ந்தேதி நடத்துகிறது
Posted On:
23 APR 2022 2:01PM by PIB Chennai
விடுதலையின் அமிர்தகால பெருவிழாவையொட்டி, ‘ புதுமையான வேளாண்மை’ குறித்த ஒருநாள் கருத்தரங்குக்கு நிதி ஆயோக் வரும் 25-ந்தேதி ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கில், மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பர்சோத்தம் ரூபலா, குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத், நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், உறுப்பினர் (வேளாண்மை) டாக்டர் ரமேஷ் சந்த், தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.
இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் புதுமையான வேளாண்மை, இயற்கை வேளாண் நடைமுறைகளுடன் தொடர்புடையவர்களை இந்தக் கருத்தரங்கு ஓருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது தொடர்பாக இதில் விவாதங்கள் நடைபெறும். மண் வளப் பாதுகாப்பு, பருவநிலை மாற்ற பாதிப்பு குறைப்பது ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படும்.
இயற்கை வேளாண்மையின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பல்வேறு கூட்டங்களில் வலியுறுத்தி வருகிறார். அண்மையில், இயற்கை வேளாண் குறித்த தேசிய மாநாட்டில், இயற்கை வேளாண்மை மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 2022-23 பட்ஜெட்டிலும், ரசாயனம் அற்ற இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் ஊக்குவிப்பது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819246
----
(Release ID: 1819306)
Visitor Counter : 165