பாதுகாப்பு அமைச்சகம்

புதுதில்லியில் பாதுகாப்புத் துறையில் சிறந்த புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு தளவாட கண்டுபிடிப்பு அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு இணைப்பு 2.0-ஐ பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ் நாத் சிங் நாளை தொடங்கி வைப்பார்

Posted On: 21 APR 2022 1:22PM by PIB Chennai

புதுதில்லி விஞ்ஞான் பவனில் பாதுகாப்புத் துறையில் சிறந்த புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு தளவாட கண்டுபிடிப்பு அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை ஏற்பாடு செய்துள்ள பாதுகாப்பு இணைப்பு 2.0 நாளை தொடங்குகிறது. இதனை பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ் நாத் சிங் தொடங்கி வைப்பார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பல புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை இது ஈர்க்கும். பிரகாசமான எதிர்காலத்திற்கு உள்நாட்டிலேயே புதிய கண்டுபிடிப்புகளை உறுதி செய்ய புதிய தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், ராணுவ பிரதிநிதிகளை இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கும்.

சிறந்த பாதுகாப்பு தடவாள கண்டுபிடிப்புகளுக்கான அமைப்பு ஐடெக்ஸ் பிரதமர் திரு.நரேந்திர மோடியால் 2018-ல் தொடங்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளில் தொடர்புடைய பல தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் தளமாக இது விளங்குகிறது. குறிப்பிட்ட இந்த துறையில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் ஒருங்கிணைப்பை கண்காணிப்பதற்கான அமைப்பாக இது செயல்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818633

 

***************



(Release ID: 1818735) Visitor Counter : 178


Read this release in: Malayalam , English , Urdu , Hindi