குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுயவேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ஜம்மு-காஷ்மீரை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் முன்னணியில் வைத்துள்ளது

Posted On: 21 APR 2022 12:48PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரில் தொழில் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியின் பொன்னான அத்தியாயத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் எழுதியுள்ளது.

2021-22-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் அதன் முதன்மைத் திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகளை நிறுவியுள்ளதோடு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் சாதனை அளவில் 21,640 உற்பத்தி மற்றும் சேவை பிரிவுகள் அமைந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசத்தில் 12,594 பிரிவுகளும், மத்தியப் பிரதேசத்தில் 8082 பிரிவுகளும், தமிழ்நாட்டில் 5972 பிரிவுகளும், கர்நாடகாவில் 5877 பிரிவுகளும், குஜராத்தில் 4140 பிரிவுகளும் அமைந்துள்ளன.

2021-220-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் 1.73 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை விட இது மிக அதிகமாகும்.

இது குறித்து பேசிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்சேனா, ஜம்மு-காஷ்மீரின் அனைத்து துறை மேம்பாடு மற்றும் தன்னிறைவுக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையே இந்த வேலைவாய்ப்புகளுக்குக் காரணம் என்று கூறினார்.

"ஜம்மு-காஷ்மீரில் இவ்வளவு பெரிய அளவிலான சுயவேலைவாய்ப்பு, மாநிலத்தை தன்னிறைவாக மாற்றுவதற்கும், வளர்ச்சியின் அடிப்படையில் மற்ற மாநிலங்களுக்கு இணையாக கொண்டு வருவதற்குமான, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் பங்களிப்பாகும்,” என்று திரு சக்சேனா மேலும் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818621

***************



(Release ID: 1818674) Visitor Counter : 178


Read this release in: English , Telugu , Urdu , Hindi