தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 பிப்ரவரியில் இபிஎஃப்ஓ 14.12 லட்சம் சந்தாதாரர்களை சேர்த்துள்ளது


தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா, தில்லி மாநிலங்களில் மட்டும் 9.52 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ப்பு

प्रविष्टि तिथि: 20 APR 2022 5:27PM by PIB Chennai

2022 பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய தகவல்களின் அடிப்படையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் கூடுதலாக 14.12 லட்சம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், 31,826 சந்தாதாரர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து மாதந்தோறும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

14.12 லட்சம் சந்தாதாரர்களில் சுமார் 8.41 லட்சம் சந்தாதாரர்கள் புதிய உறுப்பினர்கள் ஆவார்கள். சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இவர்கள் இபிஎஃப்ஓ-வில் இணைந்துள்ளனர். சுமார் 5.71 லட்சம் பேர் அமைப்பிலிருந்து வெளியேறி பின்னர் மீண்டும் சேர்ந்துள்ளனர். இவர்கள் வருங்கால வைப்பு நிதியை எடுப்பதற்கு பதிலாக பழைய கணக்கில் உள்ள வைப்பு நிதி இருப்பை புதிய கணக்குக்கு மாற்றியுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 67.49 சதவீதம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், ஹரியானா, தில்லி ஆகிய மாநிலங்களிலிருந்து மட்டும் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மாநிலங்களில் 9.52 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818407

 

***


(रिलीज़ आईडी: 1818462) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi