நிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

பொதுமக்களின் நலனை பாதுகாப்பதற்காக நிதி நிறுவன விதிகளில் மத்திய அரசு திருத்தம்

Posted On: 20 APR 2022 12:17PM by PIB Chennai

நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழ், நிதி அல்லது பரஸ்பர நல சங்கம் என்பது மத்திய அரசால் அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தைக் குறிக்கிறது. நிறுவனங்கள் சட்டம், 2013-ன் கீழ், நிதி நிறுவனமாக செயல்படுவதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு நிறுவனம் தொடக்கத்தில் அறிவிப்பு பெற வேண்டிய அவசியம் இல்லை. அத்தகைய நிறுவனங்கள் நிதி விதிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

நிறுவனங்கள் சட்டம், 2013 உள்ளிட்டவற்றின் அமலாக்கத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து பரிந்துரைகளை வழங்க அமைச்சகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டது நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழான முந்தைய விதிகளின் படி நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பது சரியானது என்று கருதப்பட்ட நிலையில் இக்குழு அமைக்கப்பட்டது.

நிறுவனங்கள் சட்டம், 2013-ல் திருத்தத்திற்குப் பிறகு 15.08.2019 முதல் அமலுக்கு வந்தது. நிறுவனங்கள் சட்டம், 1956-ன் கீழ், சுமார் 390 நிறுவனங்கள் நிதி நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. 2014-2019 ஆம் ஆண்டில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. இருப்பினும், சுமார் 2,300 நிறுவனங்கள் மட்டுமே என்டிஎச்-4 படிவத்தில் அறிவிப்புக்கு விண்ணப்பித்துள்ளன.

என்டிஎச்-4 படிவத்தை ஆய்வு செய்ததில்,சட்டம் மற்றும் நிதி விதிகள், 2014 (திருத்தப்பட்ட) பொருந்தக்கூடிய விதிகளுக்கு நிறுவனங்கள் இணங்கவில்லை என்பது கவனத்திற்கு வந்தது. பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக ஒரு நிறுவனத்தை நிதி நிறுவனமாக மத்திய அரசு அறிவிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதற்காக விதிகளில் தேவையான/முக்கியமான  சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818298

 

***************



(Release ID: 1818381) Visitor Counter : 434