அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மெய்நிகர் உயர் சிறப்பு மையத்திற்கான குவாண்டம் கணினியியலில் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் குறித்து இந்தியா, பின்லாந்து ஆலோசனை

Posted On: 20 APR 2022 10:39AM by PIB Chennai

கூட்டு முறையில் அமைக்கப்படவிருக்கும் மெய்நிகர் உயர் சிறப்பு மையத்திற்கான குவாண்டம் கணினியியலில் ஒத்துழைப்பதற்கான சாத்தியம் உள்ள துறைகள் குறித்து இந்தியா மற்றும் பின்லாந்தை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

"மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காகவும் உலகத்தின் முன்னேற்றத்திற்காகவும் குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவும் கல்வி மற்றும் தொழில்துறை பங்குதாரர்களைப் பெற இரு நாடுகளும் முயற்சி செய்கின்றன. இந்தத் துறையில் உலகளாவிய ரீதியில் சிறந்து விளங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்ட மேசை கூட்டத்தில் அத்துறையின் செயலாளர் டாக்டர் எஸ். சந்திரசேகர் கூறினார்.

இந்தத் துறைகளில் இரு நாடுகளின் பலம் மற்றும் பலவீனங்களைக் கண்டறிந்து, முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முக்கியக் குழுவை நிறுவுவதன் மூலம் பலவீனங்களைக் களைவதற்கான திட்டத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை டாக்டர் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

 

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் பின்லாந்து பொருளாதார விவகாரங்கள் அமைச்சர் திரு மிகா லிண்டிலா ஆகியோர் முன்னிலையில் குவாண்டம் கணினியியல் குறித்த இந்திய-பின்லாந்து மெய்நிகர் கட்டமைப்பு மையத்தை அமைப்பதற்கான கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டதற்கு அடுத்த நாள் இந்த கூட்டம் நடைபெற்றது.

பின்லாந்தின் சிறந்த வல்லுநர்கள் இந்தியாவின் சிறந்த நிபுணர்களுடன் இணைவதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய பின்லாந்தின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் துணைச் செயலாளரான திரு பெட்ரி பெல்டோனென், இரு நாடுகளின் வலுவான தகவல் தொழில்நுட்ப சமூகங்கள் மற்றும் அறிவியல் சூழலியல்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818250

***************

(Release ID: 1818250)




(Release ID: 1818317) Visitor Counter : 189