எஃகுத்துறை அமைச்சகம்
உலோகவியலாளர்கள் / பொறியாளர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக “தேசிய உலோகவியலாளர் விருது 2021”-ஐ எஃகு அமைச்சகம் வழங்கவுள்ளது
प्रविष्टि तिथि:
19 APR 2022 5:48PM by PIB Chennai
“தேசிய உலோகவியல் விருது 2021” நிகழ்வை மத்திய எஃகு அமைச்சகம் நாளை நடத்துகிறது. மத்திய எஃகுத்துறை அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.
இரும்பு மற்றும் எஃகு துறையில் பணிபுரியும் உலோகவியலாளர்கள்/பொறியாளர்களின் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப விருதுகளை வழங்குவது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் விரிவான ஆலோசனைக்குப் பிறகு எஃகு அமைச்சகம் தேசிய உலோகவியல் நிபுணர் விருதை நிறுவியுள்ளது. தனிநபர்/நிறுவனத்தின் சாதனைகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படும்போது அது அவர்களின் மன உறுதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதுமை மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது, ஊக்கத்தை அதிகரிக்கிறது, நட்புரீதியான போட்டியை ஊக்குவிக்கிறது, உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது, நேர்மறையான பணியிடத்தை உருவாக்குகிறது.
தேசிய உலோகவியலாளர் விருது 2021-க்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் செயல்முறை ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை நடைபெற்றது. தேர்வுக் குழுக்களின் பரிந்துரைகளின் மதிப்பீடு மற்றும் விண்ணப்பதாரர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்நாள் சாதனையாளர் விருது, தேசிய உலோகவியல் நிபுணர் விருது, இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது மற்றும் இளம் உலோகவியல் (உலோக அறிவியல்) விருது ஆகியவை இறுதி செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818101
***************
(रिलीज़ आईडी: 1818138)
आगंतुक पटल : 184