அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிளாஸ்மா அடிப்படையிலான பசுமை கிருமிநாசினிகள் கொவிட்-19 போன்ற தொற்று நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தலாம்

Posted On: 19 APR 2022 5:31PM by PIB Chennai

கொவிட்-19-க்கான பசுமை மாசு நீக்கியாக குளிர் வளிமண்டல அழுத்த பிளாஸ்மா உதவியுடன் பிளாஸ்மா அடிப்படையிலான கிருமிநாசினியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தொற்று நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தக்கூடிய மாசு நீக்கிகளின் அவசரத் தேவையை கொவிட்-19 பெருந்தொற்று முன்வைத்தது. இருப்பினும், பெரும்பாலான மாசு நீக்கிகள் சுற்றுச்சூழலுக்கு அபாயகரமான ரசாயனங்களைக் கொண்டிருந்தன. பசுமையான மாற்றுகளை நோக்கி செயல்பட ஆராய்ச்சியாளர்களை இது ஊக்குவித்தது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறிய ஆய்வுக்கான நிறுவனத்தை (இன்ஸ்டிடியூட் ஆஃப் தி அட்வான்ஸ்டு ஸ்டடி இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி) வாழ்க்கை அறிவியல் மற்றும் இயற்பியல் துறைகளை சேர்ந்த விஞ்ஞானிகளான டாக்டர் காமாட்சி சங்கரநாராயணன், டாக்டர் மோஜிபுர் ஆர் கான், மற்றும் டாக்டர் ஹெச் பைலுங் ஆகியோர் அடங்கிய குழு இக்கண்டுபிடிப்பை செய்துள்ளது.

குளிர் வளிமண்டல அழுத்தத்தால் உருவாக்கப்படும் பிளாஸ்மா கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டுள்ளது என்பதை இக்குழு நிரூபித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு அபாயகரமான ரசாயன அடிப்படையிலான தூய்மையாக்கல் முறைகளுக்கு பிளாஸ்மா அடிப்படையிலான கிருமிநாசினி முறை சிறந்த மாற்றாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். "குளிர் வளிமண்டல பிளாஸ்மா சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. ஏனெனில் பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் செய்யப்படும் முழு தூய்மைப்படுத்தும் செயல்பாட்டின் போது எந்த ரசாயன கழிவுகளும் உற்பத்தி செய்யப்படுவதில்லை,” என்று அவர்கள் கூறினர்.

கிருமி நீக்கம் செய்யும் முறையை பல்வேறு பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளுக்கு மேலும் விரிவுப்படுத்த முடியும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர்களான டாக்டர் காமாட்சி சங்கரநாராயணன் மற்றும் டாக்டர் எச் பைலுங் ஆகியோர் தெரிவித்தனர்.

வெளியீட்டு இணைப்பு:

https://doi.org/10.1039/D2RA00009A

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818089

***************



(Release ID: 1818126) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Hindi , Manipuri