வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

'ஸ்மார்ட் நகரங்கள், ஸ்மார்ட் நகரமயமாக்கல்' நிகழ்வின் 2-ம் நாள் 5 கருப்பொருள்களைக் கொண்ட அமர்வுகளுடன் தொடங்கியது

Posted On: 19 APR 2022 5:07PM by PIB Chennai

"ஸ்மார்ட் சிட்டிகள், ஸ்மார்ட் நகரமயமாக்கல்" நிகழ்வின் 2-ம் நாள், நகர்ப்புறத் துறை சார்ந்த ஐந்து கருப்பொருள் பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சுவாரசியமான அமர்வுகளுடன் தொடங்கியது. பொது இடங்கள், டிஜிட்டல் ஆளுகை, பருவநிலை ஸ்மார்ட் நகரங்கள், புத்தாக்கம் மற்றும் ஸ்மார்ட் நிதி வசதி ஆகியவை அவை ஆகும்.

75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா’-வின் ஒரு பகுதியாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் குஜராத்தின் சூரத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு 18.4.2022 அன்று பிரமாண்டமாக தொடங்கியது..

மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு முக்கிய நகர்ப்புற பங்குதாரர்கள் அமர்வுகளில் கலந்துகொண்டனர். மத்திய அரசின் அதிகாரிகள், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், நகராட்சி ஆணையர்கள், 100 ஸ்மார்ட் நகரங்களின் நிர்வாக இயக்குநர்கள்/தலைமை செயல் அதிகாரிகள், மாநில அளவிலான முதன்மை முகமைகள்/திட்ட இயக்குநரகங்கள், அதிகாரிகள், குழு உறுப்பினர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.

திட்டமிடப்பட்ட பராமரிப்புக்கான தொழில் நுட்பப் பயன்பாடு, சொத்து வரி மேம்பாடு, சுத்தமான காற்று, நீர் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கான செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் உள்ள நகரங்களுக்கான தீர்வுகள் குறித்து ஆர்வத்தை அமர்வில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் வெளிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1818076

***************

 

(Release ID: 1818076)



(Release ID: 1818114) Visitor Counter : 149