குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

அறிவியலும் தொழில்நுட்பமும் மக்களின் பொதுவான நலன் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்தப்பட வேண்டும் - குடியரசு துணைத்தலைவர்

Posted On: 18 APR 2022 5:15PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை, மக்களின் பொதுவான நலன் மற்றும் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். ‘அறிவியல் சமுதாய நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சிலர், உயர் வர்க்கத்தினருக்காக அல்ல’ என்று கூறியுள்ள அவர், மக்களின் எதிர்பார்ப்புகளும், குறிக்கோள்களும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை, வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

விஜயவாடா அருகே உள்ள அத்கூரில், சுவர்ணபாரத அறக்கட்டளையில், “டாக்டர் ஒய் நாயுடம்மா: கட்டுரைகள், உரைகள், குறிப்புகள் & பிற அம்சங்கள்” என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டு பேசிய திரு நாயுடு, அறிவியலும் தொழில்நுட்பமும், மக்களை அடிமைகளாக்கிவிடக்கூடாது என்றார். பிரபல விஞ்ஞானியான டாக்டர் யளவர்த்தி நாயுடம்மாவின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலை வருமான வரித்துறை முன்னாள் ஆணையர் டாக்டர் சந்திரஹாஸ் மற்றும் டாக்டர் கே சேஷகிரி ராவ் ஆகியோரால் தொகுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த டாக்டர் நாயுடம்மாவின் தொலைநோக்குப் பார்வையை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர், அறிவியலும் தொழில்நுட்பமும் பொதுவான நல்ல அம்சங்களுக்காக சமுதாய நற்பண்புகளைக் கொண்ட அம்சங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் விரும்பியதாக குறிப்பிட்டார்.  “மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான சாதனமாக பயன்படும் வகையில்,  அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான  குறிக்கோள் மற்றும் இலக்குகள் மற்றும் சமூக -  பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கிரியா ஊக்கியையும் அவர் (நாயுடம்மா) தெளிவாக உணர்த்தியிருக்கிறார்” என்றும் திரு  வெங்கய்யா நாயுடு குறிப்பிட்டார்.

அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது, அவற்றை  முன்னெடுத்துச் செல்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளை முறையாக அறிந்து கொள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817805

***************



(Release ID: 1817858) Visitor Counter : 248


Read this release in: English , Urdu , Hindi , Punjabi