விவசாயத்துறை அமைச்சகம்
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கு மாபெரும் ஊக்குவிப்பாக வேளாண் பொருட்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஏற்றுமதி / இறக்குமதி குறித்த பதிவுக்கு ஒருங்கிணைந்த உயர் தொழில்நுட்ப இணையப் பக்கத்தை மத்திய வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
18 APR 2022 4:28PM by PIB Chennai
பூச்சிக்கொல்லி மருந்து கணினிமயமாக்கப்பட்ட பதிவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பரவலாக்குதலை தடுப்பதற்கான தகவல் முறை ஆகியவற்றுக்கான இரண்டு இணையப் பக்கங்களை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் இன்று தொடங்கி வைத்தார்.
வேளாண் துறைக்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மனதில் கொண்டு இந்த இரண்டு இணையப் பக்கங்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும், இவை டிஜிட்டல் வேளாண்மை மற்றும் வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றை முன்னெடுக்க உதவும் என்றும் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறினார்.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு.கைலாஷ் சௌத்ரி பேசுகையில், தொழில்நுட்பம் குறித்த பிரதமரின் வலியுறுத்தல் வேளாண் துறையை மேலும் மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றார். இந்தப் புதிய இணையப் பக்கங்கள் விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும், தொழில் துறையினருக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை செயலாளர் திரு.மனோஜ் அஹூஜா, நல்ல நிர்வாகத்திற்கான மையத்தின் தலைமை இயக்குனர் திரு.ராஜேந்திர நிம்ஜே, ஐசிஏஆர் விஞ்ஞானிகள், மாநிலங்கள், தொழில்துறை, விவசாய சங்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் மத்திய வேளாண் அமைச்சக மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817777
****
(रिलीज़ आईडी: 1817838)
आगंतुक पटल : 287