தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம்
நாட்டின் சைபர் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய துறை சார்ந்த நிறுவனங்களுக்கான தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம், ஏற்பாடு செய்துள்ளது
Posted On:
18 APR 2022 3:13PM by PIB Chennai
தேசிய சைபர் பாதுகாப்பு தொடர்பான பயிற்சியை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் மற்றும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் சதீஷ் ரெட்டி ஆகியோருடன் இணைந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு கே.சி., அஜித் தோவல், இன்று தொடங்கி வைத்தார். தேசிய சைபர் பயிற்சி, (NCX) ஏப்ரல் 18-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பத்து நாட்களுக்கு ஒரு கலப்பினப் பயிற்சியாக நடத்தப்படும். அரசு மற்றும் முக்கிய துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் முகாமைகளின் மூத்த மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இணையத்தளப் பாதுகாப்பு மற்றும் தரவு மீட்டெடுப்பு குறித்த பயிற்சியை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS), அதன் அறிவுசார் கூட்டாளியான இந்திய தரவு பாதுகாப்பு கவுன்சிளுடன் (DSCI) இணைந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) ஆதரவுடன் நடத்தப்படுகிறது. உலகளவில் பல பெரிய அளவிலான இணைய பாதுகாப்பு தொடர்பான பயிற்சிகளை நடத்துவதற்கு அங்கீகாரம் பெற்ற்றுள்ள எஸ்டோனிய சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சைபர்எக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.
லைவ் பயர் மற்றும் திறன்சார்ந்த பயிற்சிகள் மூலம் 140-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் இணையவழி ஊடுருவலைக் கண்டறியம் தொழில்நுட்பங்கள், மால்வேர் தகவல் பகிர்வு தளம் (MISP), பாதிப்பைக் கையாளுதல் சோதனைத் திறன் போன்ற பல்வேறு முக்கிய இணையப் பாதுகாப்புத் தொடர்பான அம்சங்களில் பயிற்சி வழங்கப்படும்.
இணையதள அச்சுறுத்தல்களை நன்கு புரிந்து கொள்ளவும், தயார்நிலையை மதிப்பீடு செய்யவும், இணையதள நெருக்கடி மேலாண்மை மற்றும் ஒத்துழைப்பிற்கான திறன்களை மேம்படுத்தவும் தேசிய சைபர் பயிற்சி நிறுவனம் முக்கிய தலைவர்களுக்கு உதவிடும். இது சைபர் பாதுகாப்புத் திறன்கள், குழுப்பணி, திட்டமிடல், தகவல் தொடர்பு, விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றை மேம்படுத்தவும் சோதிக்கவும் உதவிகரமாக இருக்கும்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.சி., அஜித் தோவல், நாட்டில் நடைபெற்று வரும் டிஜிட்டல் புரட்சி மற்றும் அரசு தொடங்கியுள்ள ஏராளமான டிஜிட்டல் செபைகள் குறித்து எடுத்துரைத்தார். எந்தவொரு வெற்றிகரமான டிஜிட்டல் மாற்றத்திற்கும் சைபர் பாதுகாப்பு அடித்தளமாக உள்ளது என்று அவர் கூறினார். சைபர்ஸ்பேஸில் ஏற்படும் எந்த அச்சுறுத்தலும் நமது சமூக, பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பை நேரடியாக பாதிக்கிறது என்பதால் நாம் நமது சைபர்ஸ்பேஸைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த் பேசுகையில், இந்திய சைபர்ஸ்பேஸின் முக்கியத்துவத்தையும் குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசு ஆகியவற்றின் தரவுகளை பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். உலகளவிலும், நாட்டிலும் நடைபெறும் Ransomware மற்றும் விநியோகச் சங்கிலி தாக்குதல்களின் அதிகரிப்பு குறித்தும், இந்த தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது என்றும் தெரிவித்தார். ஆயில் இந்தியா நிறுவனத்தின் மீது அண்மையில் நடத்தப்பட்ட ransomware தாக்குதலையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இணையதள பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817745
***************
(Release ID: 1817794)
Visitor Counter : 242