ஜல்சக்தி அமைச்சகம்
நமாமி கங்கே திட்டத்தின் நேர்மறையான தாக்கம் 'புனித கங்கை' நதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது என்று தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்
Posted On:
17 APR 2022 4:08PM by PIB Chennai
சிங்கப்பூர் சர்வதேச தண்ணீர் வாரம், தண்ணீர் மாநாடு 2022-ல் காணொளி மூலம் பங்கேற்ற தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் தலைமை இயக்குனர் (NMCG) திரு ஜி. அசோக் குமார், 'இந்தியாவில் கழிவுநீர் உற்பத்தி, சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மையின் நிலை குறித்து தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கத்தின் முன்னெடுப்பு பணிகளின் வெற்றி' என்ற தலைப்பில் விளக்கமளித்தார். 'வளரும் நாடுகளில் நிலையான கழிவுநீர் மேலாண்மை: நதிகளுக்கு புயத்துயிர் அளிப்பதில் புதுமையான இந்திய அணுகுமுறை' என்ற தலைப்பில் நீர் மாநாட்டின் 3-வது கருப்பொருளின் கீழ் ஏப்ரல் 17 -ம் தேதி தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம் நடத்திய முக்கிய பிரச்சினைகள் குறித்த பயிற்சிப் பட்டறையில் திரு குமார் பேசினார்.
இந்தியாவின் தண்ணீர் சூழ்நிலை, நீர் மற்றும் கழிவு நீர் துறையில் அரசின் முக்கிய திட்டங்கள் ஆகியவை குறித்து கோடிட்டுக் காட்டிய திரு ஜி. அசோக் குமார், 2019-ம் ஆண்டில் ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டதை "ஒரு வரலாற்று தருணம்" என்று குறிப்பிட்டார். ஜல் சக்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
திரு குமார், நமாமி கங்கே திட்டம் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை அளித்தார். இத்திட்டத்தின் சில நேர்மறையான விளைவுகள் மற்றும் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார். கங்கை புனிதத் தன்மை குறித்து விவரித்த அவர் மற்றும் அதன் ஆறு முக்கிய அம்சங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார். அவை பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை விவசாயம், வாழ்வாதார உருவாக்க வாய்ப்புகள், கலாச்சார பாரம்பரியம் மற்றும் சுற்றுலா, பணமாக்குதல் , சேறு மற்றும் கழிவுநீரின் மறுபயன்பாடு, பொது மக்களின் பங்களிப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு ஆகியன.
நமாமி கங்கே திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளில் கவனம், யமுனை போன்ற கங்கையின் துணை நதிகளில் கழிவுநீர் உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கேற்பு, போன்ற வளர்ச்சிப் பணிகளில் அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார். மீட்டெடுப்பு, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்தும் வகையில்,ஒரு வட்ட பொருளாதார மாதிரியை உருவாக்குவதில் தூய்மை கங்கை தேசிய இயக்கத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புறங்களில் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் மேலாண்மை ஆகியவை இத்திட்டப் பணியின் முக்கிய பகுதிகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817561
****
(Release ID: 1817589)
Visitor Counter : 356