குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2022 4:12PM by PIB Chennai
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தி வருமாறு :
இயேசுபிரான் உயிர்த்தெழுந்த புனித நாளான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது அன்பான, நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறுப்பைவிட அன்பு வலிமை மிக்கது என்பதையும், அதன் மூலம், தீமைகளை வெல்லலாம் என்பதை, புனிதப் பண்டிகையான ஈஸ்டர் மக்களுக்கு நினைவூட்டுகிறது.
மனிதர்கள் அனைவரிடமும் கருணைகாட்டி, ஈஸ்டர் பண்டிகையை நாம் கொண்டாடுவோம். நமது வாழ்வில், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை இந்த நன்னாள் ஏற்படுத்தட்டும்.
*****
(வெளியீட்டு அடையாள எண்: 1817317)
வருகையாளர் எண்ணிக்கை : 175