சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் டிஜிட்டல் சுகாதார சூழலியலை கட்டமைக்கும் வகையில் புதுமையான தீர்வுகளின் உருவாக்கத்திற்கான விருப்பத்தை தெரிவிக்குமாறு தேசிய சுகாதார ஆணையம் அழைப்பு
Posted On:
14 APR 2022 4:47PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை (ABDM) செயல்படுத்தும் நிறுவனமான தேசிய சுகாதார ஆணையம் (NHA), தேசிய டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பை ஏற்படுத்த உதவும் புதுமையான தீர்வுகளை உருவாக்க ஆர்வமுள்ள அனைத்து தரப்பினருக்கும் தங்கள் ஆர்வத்தை (EoI) பகிர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டு அணுகுமுறை நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவுவதுடன், பொது மற்றும்/அல்லது தனியார் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் பொது பொருட்களை கிடைக்கச் செய்வதற்கும் உதவிடும்.
ஆர்வமுள்ள நபர்கள் இதற்கான தீர்வுகளை பொது மற்றும்/அல்லது தனியார் நிறுவனங்களுக்கு கட்டணமில்லா சேவையாக வழங்க வேண்டும்.
டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பிற்குள் இயங்கக்கூடிய ஒரு தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்குவதை ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணியானது 'டிஜிட்டல் கட்டுமானத் தொகுதிகளின்' தொகுப்பாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியும் டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பில் உள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் பயன்படுத்தக்கூடிய 'டிஜிட்டல் பொது நன்மையாக' பார்க்கப்படுகிறது.
ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான (EoI) தேசிய சுகாதார ஆணையத்தின் அழைப்பின் பின்னணியில் உள்ள நோக்கத்தை பகிர்ந்துகொண்ட , அந்த ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா, “டிஜிட்டல் சுகாதார சூழல் அமைப்பில் திறந்தவெளி மற்றும் இயங்கக்கூடிய தரநிலைகளுக்கு உத்வேகம் அளிக்க ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் முயற்சி செய்து வருகிறது," என்று கூறினார்.
இத்தகைய முயற்சி இந்தியாவில் உலகளாவிய சுகாதார தேவைகளின் இலக்குகளை விரைவுபடுத்துவதுடன், உலகளாவிய சுகாதார சூழல் அமைப்பிலும் விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், அத்தகைய இலட்சியத்தை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்படவேண்டும்.இது தொடர்பாக, தேசிய சுகாதார ஆணையம், அனைத்து ஆர்வமுள்ள தரப்பினரையும் ஒருங்கிணைந்த சுகாதார இடைமுகம் (UHI), ஹெல்த் க்ளைம்ஸ் புரோட்டோகால் (HCP) மற்றும் டிஜிட்டல் சுகாதார சூழல் விரிவாக்கத்திற்காக உருவாக்கப்படும் டிஜிட்டல் பொதுப் பொருட்களுக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816789
----
(Release ID: 1816843)
Visitor Counter : 206