ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022 மார்ச்சில் ரயில்வே பாதுகாப்பு படையின் செயல்பாடு

Posted On: 14 APR 2022 2:58PM by PIB Chennai

ரயில்வே பாதுகாப்பு படைக்கு (ஆர்பிஎப்ரயில்வே சொத்துக்களை பாதுகாப்பதுபயணிகள் பகுதிபயணிகளுடன் தொடர்புடைய பணிகள் ஆகியவற்றை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதுரயில்கள் மற்றும் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கான பணிகளில் ஆர்பிஎப் பணியாளர்கள் அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளனர்.  பயணிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்வதும்பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதும்அவர்களது தலையாய பணிகளாகும்

மிஷன் ஜீவன் ரக்ஷா என்ற இயக்கத்தின் கீழ் ஆர்பிஎப் ஊழியர்கள் 50 ஆண்கள், 24 பெண்கள் என மொத்தம் 74 பேரை மார்ச் மாதத்தில் விபத்தில் சிக்காமல் காப்பாற்றியுள்ளனர். 2022-ம் வருடத்தில் மார்ச் வரை மொத்தம் 178 பேரை (106 ஆண்கள் மற்றும் 72 பெண்கள்காத்துள்ளனர்.

ஆபரேஷன் நன்ஹே பரிஸ்டே என்ற தலைப்பிலான திட்டத்தில் 1420 (954 ஆண் + 466 பெண்குழந்தைகளுக்கு மார்ச் பாதுகாப்பு அளித்து காப்பாற்றியுள்ளனர்இத்திட்டத்தின் கீழ் 2022-ல் மார்ச் வரை 3621 (2442 ஆண் + 1179 பெண்குழந்தைகளை காத்துள்ளனர்.

ஆபரேஷன் அமானத் என்ற பெயரில் 2000 பயணிகளுக்கு சொந்தமான உடைமைகள் மீட்கப்பட்டனஅதன் மதிப்பு ரூ 3.41 கோடி ஆகும்மார்ச் மாதத்தில் ரூ 3.12 கோடி மதிப்புள்ள போதை மருந்து பொருட்கள் கைப்பற்றப்பட்டு அது தொடர்பாக 91 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் இருந்து தொலைந்து போன/பிரிந்து செல்லும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை மீட்கும் உன்னதமான பணியை ஆர்பிஎஃப் மேற்கொள்கிறதுசுரண்டுபவர்களின் கைகளில் குழந்தைகள் சிக்கும் முன் அவர்களைப் பாதுகாப்பதற்காக ரயில்வே பாதுகாப்புப் படையினர் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்இதற்காக “ஆபரேஷன் நன்ஹே ஃபாரிஸ்டே” எனும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816759


(Release ID: 1816778)
Read this release in: Manipuri , English , Urdu , Hindi