எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு சோதனை அடிப்படையிலான உற்பத்தி மண்டலத்தை அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted On: 14 APR 2022 11:16AM by PIB Chennai

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு சோதனை அடிப்படையில் உற்பத்தி மண்டலத்தை அமைப்பதற்கு  விருப்பத்தை தெரிவிக்குமாறு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மின்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐந்தாண்டுகளுக்கு 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில்சோதனை அடிப்படையில் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க துறைக்கான உற்பத்தி மண்டலத்தை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆணைகளை மின்துறை அமைச்சகம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டமான இத்திட்டத்தின் காலம் 2022-23-ம் நிதியாண்டு முதல் 2026-27-ம் நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகள் ஆகும்நிறுவனங்கள் தங்களது விருப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூன் மாதம் 8-ம் தேதி ஆகும்.

விருப்பத்தை தெரிவிப்பதற்கான அழைப்பு குறித்த செயல்முறையின் சுருக்கமான விளக்கம்:

இத்திட்டத்தை செயல்படுத்துபவரைத் தேர்ந்தெடுப்பதற்க்கான ஒற்றை நிலை விருப்பத்தை வரவேற்கும் நடைமுறைகளை ஆணையம் ஏற்றுக்கொண்டது.

ஒவ்வொரு நிறுவனமும் ஒரு முன்மொழிவை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும்அனைத்து முன்மொழிவுகளும்  விதிமுறைகளின்படி முன்மொழிவை சமர்பிப்பதற்கான கடைசித் தேதி அல்லது அதற்கு முன் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்இது தொடர்பான கூடுதல் தகவல்கள்ஏதேனும் கேள்விகள் அல்லது கோரிக்கைகள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

 

மேலும் விவரங்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816668

----


(Release ID: 1816754) Visitor Counter : 182