குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

தொழுநோயை முற்றிலும் அகற்றுவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

Posted On: 13 APR 2022 6:22PM by PIB Chennai

தொழுநோயை முன்கூட்டியே கண்டறிதல், உரிய சிகிச்சைக்கு சமமான அணுகுமுறை  மற்றும் ஒருங்கிணைந்த தொழுநோய்க்கான  சேவைகள் ஆகியவற்றுக்கான தீவிர முயற்சிகளுக்கு குடியரசுத் துணைத் தலைவர்  திரு. எம். வெங்கையா நாயுடு  அழைப்பு விடுத்துள்ளார்.

சண்டிகரை சேர்ந்த டாக்டர் பூஷன் குமாருக்கும், குஜராத்தின் சஹ்யோக் குஷ்ட யக்னா அறக்கட்டளைக்கும், 2021-ம்  ஆண்டின்  தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதை புது தில்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் அவர் இன்று வழங்கினார். காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளையால் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் டாக்டர். பூஷன் குமார் மற்றும் சஹ்யோக் குஷ்தா யக்னா டிரஸ்ட் இருவரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும், அவர்களின் முயற்சிகளை பாராட்டுவதாகவும் திரு வெங்கைய்ய நாயுடு கூறினார். அது தொடர்பான களங்கத்தை நீக்கவும் அவர்கள் பாடுபட்டு வருகின்றனர். "அவர்களின் முயற்சிகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை" என்று அவர் மேலும் கூறினார்.

தொழுநோயை ஒழிப்பு பிரச்சாரத்தில் மக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர்  கேட்டுக் கொண்டார். இந்த உன்னதப் பணிக்கு ஆதரவாக சமூகம் அணிதிரள வேண்டும் என்றார். தொழுநோய் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளையும்  கிராமசபை  திட்டங்களில் சேர்க்க வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.

தொழுநோய்க்கு எதிரான நாட்டின்  நிலையான போராட்டத்தை ஒப்புக்கொண்ட திரு நாயுடு, பத்தாயிரம் பேர் கொண்ட மக்கள்தொகையில் ஒருவருக்கும் குறைவான தொழுநோய் பாதிப்பு என்ற நிலையை இந்தியா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்றார்.

உலகளவில் இந்தியாவில் தான் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில்  இருப்பதாக தனது கவலையை வெளிப்படுத்திய திரு நாயுடு, உலகளவில் (2020-2021) இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டவர்களில் (51%) அதிகம் பேர் இந்தியாவில்  இருப்பதாகக் கூறினார். தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் (என்எல்இபி) தொழுநோய்க்கு எதிரான போரில் முன்னணியில் இருப்பதாகவும், முழுமையான ஒழிப்பை உறுதிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான  சமூகப் புறக்கணிப்பை அகற்றுவதில் மகாத்மா காந்திஜியின் பங்களிப்பை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், “மகாத்மா காந்திஜியின் தொழுநோயாளிகள் மீதான பரிவு, சக மனிதர்கள் மீதான முன்மாதிரியான கருணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார். நோயைப் பற்றிய அறியாமை ஆதிக்கம் செலுத்திய சகாப்தத்தில், காந்திஜி ஒரு உதாரணத்தால் வழிநடத்தப்பட்டார் - பெரும்பாலும் தொழுநோயாளிகளுக்கு தனிப்பட்ட முறையில் சிகிச்சை செய்தார்.

காந்திஜியை மேற்கோள் காட்டிய, திரு  நாயுடு “தொழுநோய் பணி என்பது மருத்துவ நிவாரணம் மட்டுமல்ல; அது வாழ்க்கையில், விரக்தியை அர்ப்பணிப்பின் மகிழ்ச்சியாகவும், தனிப்பட்ட லட்சியத்தை தன்னலமற்ற சேவையாகவும் மாற்றுகிறது என்று தெரிவித்தார். நீங்கள் ஒரு நோயாளியின் வாழ்க்கையை மாற்றினால் அல்லது அவரது வாழ்க்கை மதிப்புகளை மாற்றினால், கிராமத்தையும் நாட்டையும் மாற்றலாம்.

திரு திருபாய் மேத்தா, தலைவர், காந்தி நினைவு தொழுநோய் அறக்கட்டளை, டாக்டர் அனில் குமார், டிடிஜி, தொழுநோய், டாக்டர் பி.எஸ். கர்க், கன்வீனர், தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதுகள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816505

***************



(Release ID: 1816557) Visitor Counter : 234


Read this release in: English , Urdu , Hindi , Marathi