நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

2021-22-ம் ஆண்டில் பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில அரசுகளுக்கு உணவு மானியமாக .2,94,718/- கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

Posted On: 13 APR 2022 5:38PM by PIB Chennai

2021-22-ம் நிதியாண்டில், பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டம் (PMGKAY) மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 (NFSA) ஆகியவற்றின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை MSP மற்றும் தடையற்ற உணவு தானிய விநியோகத்தின் கீழ் கொள்முதல் நடவடிக்கைகளுக்காக உணவு மற்றும் பொது விநியோகத் துறை, இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில அரசுகளுக்கு உணவு மானியமாக 2,94,718/- கோடி ரூபாயை பரவலாக்கப்பட்ட மற்றும் டிசிபி அல்லாத கொள்முதல் செயல்பாடுகளின் கீழ் .திருத்தப்பட்ட மதிப்பீடாக விடுவிக்கப்பட்டது.

உணவு மானியத்தின் இந்த வெளியீடு 2020-21 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உணவு மானியத்தில் சுமார் 140% மற்றும் 2019-20 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உணவு மானியத்தில் 267% ஆகும்.

2021-22-ம் நிதியாண்டில், உணவு மற்றும் பொது விநியோகத் துறை, நிகர ஒதுக்கீடான 3,04,879/-கோடி ரூபாயில் 3,04,361/- கோடி ரூபாய் அளவிற்கு அதாவது, 99.83% செலவினத்தை எட்டியுள்ளது.

2021-22-ம் ஆண்டு  ரபி பருவத்தில் கோதுமை கொள்முதல் மற்றும் காரீஃப்  பருவத்தில் நெல் கொள்முதல் என மொத்தம் 1175 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலையாக 2.31 லட்சம் கோடி ரூபாய் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தியதன் மூலம்  154 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1816459

***************(Release ID: 1816553) Visitor Counter : 118