பாதுகாப்பு அமைச்சகம்
14-வது இந்திய –ஆஸ்திரேலிய கடற்படைகளின் (இன் - ரான்) அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை, 11-13 ஏப்ரல் 2022
Posted On:
13 APR 2022 3:52PM by PIB Chennai
14-வது இந்தியா - ஆஸ்திரேலியா கடற்படை அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தை, இம்மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை புது தில்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஆஸ்திரேலியா கடற்படைத் துணைத் தளபதி, ரியர் அட்மிரல் கிறிஸ்டோபர் ஸ்மித், இந்தியக் கடற்படையின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் J சிங், (FCI), ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆஸ்திரேலிய அரசின் ஹைட்ரோகிராஃபர் கமோடர் Stewart Dunne –ம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளின் கடல்சார் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
14-வது இந்திய - ஆஸ்திரேலியா கடற்படை அதிகாரிகள் நிலையிலான பேச்சு வார்த்தையின் முடிவில், ஆஸ்திரேலியா கடற்படை ரியர் அட்மிரல் கிறிஸ்டோபர் ஸ்மித் இன்று புதுதில்லியில், இந்திய கடற்படைத் துணைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்சய் மஹிந்த்ருவுடன் உரையாடினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816387
***************
(Release ID: 1816525)
Visitor Counter : 157