உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து  நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 11 APR 2022 5:10PM by PIB Chennai

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்னணு - சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புப் பணியகத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா, சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் (பிசிஏஎஸ்) தேசிய விமானப் பாதுகாப்புத் திட்டத்தை நிறுவி, அதன் மேம்பாடு, அமலாக்கம், பராமரிப்பு மற்றும் மதிப்பாய்வு செய்கிறது. இது விமானங்களின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோத குறுக்கீடு மற்றும் அச்சுறுத்தல் போன்ற செயல்களுக்கு எதிராக சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளைப் பாதுகாக்கிறது. இந்தப் பணியை தற்போது மின்னணு - வில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு  பணியகம் மேற்கொண்டுள்ளது. இது மின்னணு நிர்வாகத்தின் கீழ் உள்ளக செயல்முறைகளை தனித்து இயங்குவதற்கான ஒரு முயற்சியாகும். இது பங்குதாரர்களை வசதிகளை எளிதாக்குவதற்கான ஆன்லைன் தளமாக செயல்படும். இதன் முழு செயல்பாதுகளும் வெளிப்படைதன்மை, திறன் வாய்ந்த மற்றும் எளிமையயாக கைய்யாளக்கொடிய வகையில் மாற்றும் நோக்கத்துடன், தற்போதுள்ள செயல்முறைகள் மற்றும் நிறுவன கட்டமைப்பின் பலத்தை இது மேம்படுத்த உதவிடும். இது பல்வேறு பிரிவுகள் மற்றும் செயல்முறைகளில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மூலம் அலுவலக நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, விரைவான ஒப்புதல் வர்த்தகம் புரிதலை எளிமையாக்குவதை உறுதி செய்யும்.

எளிமையான டிஜிட்டல் பயன்பாடு  தொகுதியின் கீழ், பாதுகாப்பு அனுமதி வழங்கப்படுமென அமைச்சர் சிந்தியா கூறினார். மின்னணு-பயிற்சி தொகுதியின் கீழ், விமான பாதுகாப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ்களுக்காக 16 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தொகுதியானது ஆன்லைன் சோதனை மற்றும் அளிக்கப்படும் பயிற்சியின் தரம் பற்றிய பயனுள்ள மேற்பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியது. மையப்படுத்தப்பட்ட அணுகல் கட்டுப்பாட்டு அமைப்பு (CACS) பயோ-மெட்ரிக் மூலம் விமான நிலைய நுழைவு அனுமதி மற்றும் வாகன நுழைவு அனுமதிக்கான ஆன்லைன் அமைப்பைக் கையாள்கிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் விமான நிலையங்களில் மண்டலங்கள் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களின் அணுகலை ஒழுங்குபடுத்தும். மின்னணு பாதுகாப்பு நடவடிக்கை என்பது பாதுகாப்பு திட்ட அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர வசதியாகும். மின்-தரக் கட்டுப்பாட்டு தொகுதி என்பது விமான நிலையங்களின் பாதுகாப்பு தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆய்வுக்கானது. e-Sahaj, CACS மற்றும் e-training ஆகிய 3 தொகுதிகளுக்கான பணிகள் முடிக்கப்பட்டு அவை தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. டிஜிட்டல் பாதுகாப்பு தொகுதிக்கான பணிகள்   2022-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள்  முடிவடையும் என்றும், மின்னணு-தரக் கட்டுப்பாட்டு திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆலோசனைக்கு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி.கே.சிங், சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர்  ராஜீவ் பன்சால் மற்றும் அமைச்சக அதிகாரிகள், இந்திய விமான நிலைய ஆணையம், பிசிஏஎஸ், டிஜிசிஏ ஆகிய அமைப்புகளின் அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815675

***************


(Release ID: 1815752) Visitor Counter : 194